ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் பட புதிய டிரெய்லர் ரிலீஸ்.. கடைசி முறையாக நடிக்கும் பாண்ட் 007 யார் தெரியுமா?

by Chandru, Sep 4, 2020, 10:28 AM IST

நோ டைம் டு டை என்ற 25வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளிவந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் இந்த படத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக ஜேமஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் டேனியல்.நோ டைம் டு டை படத்திற்கான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த புதிய டிரெய்லர் வியக்க வைக்கும் காட்சிகள், அதிரடி காட்சிகள் மற்றும் கிரெய்கின் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. முந்தைய பாண்ட் திரைப்படங்களை விட மிகப் பிரமாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. கூடுதலாக நகைச்சுவைக்கும் இடம் தரப்பட்டிருக்கிறது.

இதில் ராமி மாலெக் வில்லனாக நடிக்கிறார். இவரது பாத்திரம் இதுவரை பார்த்த ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன்களிலிருந்து இன்னும் பயங்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராமி பற்றிக் கூடுதல் விவரங்கள் இன்னும் தெரிவில்லை. பாண்ட் இதுவரை சந்தித்த மிக ஆபத்தான மனிதர் அவர் என்பது மட்டும் உறுதி.எச்.பி.ஓ டிவி தொடரின் ட்ரூ டிடெக்டிவ் முதல் சீசனுக்காக அறியப்பட்ட கேரி ஜோஜி ஃபுகுனாகா இப்படத்தை இயக்கி உள்ளார். நீல் பூர்விஸ், ராபர்ட் வேட், ஃபுகுனாகா மற்றும் ஃபோப் வாலர்-பிரிட்ஜ் ஆகியோரால் ஸ்கிரிப்ட் அமைத்திருக்கின்றனர். முன்னதாக, நோ டைம் டு டை படத்தை டேனி பாயில் இயக்குவதாக இருந்தது. ஆனால் பட நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் படத்தை விட்டுவிலகினார்.

ரால்ப் ஃபியன்னெஸ், நவோமி ஹாரிஸ், பென் விஷா, ரோரி கின்னியர், ஜெஃப்ரி ரைட் மற்றும் லியா செடாக்ஸ் ஆகியோர் முந்தைய படங்களிலிருந்து தங்கள் பாத்திரங்களை வேறுபடுத்தி நடித்திருகிறார்கள். இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி இங்கிலாந்திலும், நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். நோ டைம் டு டை படத்திலேயே ஜேம்ஸ் வேடத்தில் நடிக்க டேனியல் மறுத்திருந்தார், ஆனால் அவரிடம் இந்த படத்தில் நடிக்கக் கேட்டுச் சம்மதிக்க வைக்கப்பட்டார்.


More Cinema News

அதிகம் படித்தவை