எனக்கு தேவைப்பட்ட நேரத்துல அந்த பரதேசிய காணோம்.. பிரபல டிவி தொகுப்பாளினியின் வீடியோ வைரல்..

by Chandru, Sep 8, 2020, 10:27 AM IST

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இந்த வேலை மட்டுமல்ல நடிகையாகவும் இருக்கிறார். ஜூலி கணபதி, விசில், ஃபைவ் பை ஃபோர், சரோஜா, பவர் பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். செல்ப்ரட்டிகள் ஃபிரண்டாக இருக்கும் இவர் பாலிவுட் வரை நட்பு பேணுகிறார். அடிக்கடி இணையதளத்தில் படங்கள் பகிர்ந்து இளசுகளை ஈர்த்தும் வருகிறார்.திவ்ய தர்ஷினி என்ற டிடிக்கு திருமணம் ஆகிவிட்டது. தனது நெருங்கிய நண்பராக இருந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை மணந்தார். ஆனால் ஒரு வருடம் தான் திருமணம் நிலைத்தது அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்தார்.


டிடி தற்போது வீடியோவில், தேவைப்பட்டப்ப அந்த பரதேசியை காணோம் என யாரையோ தேடுகிறார். அப்படி என்ன டிடிக்கு தேவை ஏற்பட்டிருக்கிறது என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த போது செம்ம லந்து செய்திருக்கிறார்.ஜெகமே தந்திரம் படத்தில் தனுஷ் பாடி இருக்கும் ரகிட ரகிட பாடலை இன்ஸ்டாகிராமில் டப்மேஷ் செய்திருக்கிறார்.அந்த நாலுபேரை இதுவரைக்கும் பார்த்ததில்ல நானும் எனக்கு தேவபட்ட நேரம் அந்த பரதேசிய காணோம் ..என்று தந்து ஸ்டைலில் சின்ன சின்ன ரியாக்ஷனை முகத்தில் காட்டி அசத்தி இருக்கிறார் டிடி.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை