உத்தம புத்திரன் நடிகர் காலமானார்.. திடீர் மாரடைப்பு..

by Chandru, Sep 8, 2020, 11:12 AM IST

தனுஷ், ஜெனிலியா நடித்த படம் உத்தம புத்திரன். இதில் ஜெனிலியாவின் மாமாவாக கறார் மற்றும் காமெடி கலந்த வேடத்தில் நடித்தவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. இவர் இன்று காலை மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. தமிழில் தர்மபுரி. திரு ரங்கா ஆகிய படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.ஆந்திரா மாநிலம் குண்டூரில் வசித்த வந்த ஜெயப்பிரகாஷ் ரெட்டி தெலுங்கில் பிரம்ம புத்ருடு படத்தில் தொடங்கித் தொடர்ந்து ப்ரேமின்ச்சுகுண்டம் ரா, கப்பர் சுங், சென்னகேசவ ரெட்டி, சீதய்யா மற்றும் டெம்பர் போன்ற பல படங்களில் இவர் நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது.

ஜெயப்பிரகாஷ் ரெட்டியின் சொந்த ஊர் அல்லகட்டா. இவரது ராயலசீமா பகுதி தெலுங்கு பணியிலான பேச்சு அனைவரையும் கவரும் என்பதால் அதற்காகவே பல படங்களில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது மறைவுக்குத் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை