இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டதுமே ஊற்றி மூடிவிடுவார்கள் என்றுதான் பேச்சு இருந்தது. மும்பை போலீசாரும் 30 பேரிடம் வாக்கு மூலம் வாங்கியும் ஒரு அணுவையும் அசைக்கவில்லை.
சுஷாந்த் தற்கொலைக்கு மன உளைச்சல் தான் காரணம், வாரிசு நடிகர்கள் அவருக்கு மன உளைச்சல் தந்தனர் என்று கங்கனா கூறினார். இது விவாதமாக மாறியது. இந்நிலையில்தான் அதிரடி திருப்பமாக சுஷாந்த் தந்தை கேகே சிங் தனது மகன் தற்கொலைக்கு நடிகையும், காதலியுமான ரிய சக்ரபோர்த்திதான் காரணம் என பாட்னா போலீசில் புகார் அளித்தார். அத்துடன் ரூ 15 கோடி சுஷாந்த் கணக்கி லிருந்து மோசடி நடந்துள்ளது என குறிப்பிட்டார். அத்துடன் போதைமருந்து விவாகாரமும் அம்பலமானது. இது இந்த வழக்கில் அதிர்ச்சியையும் புதிய கோணத் தையும் ஏற்படுத்தியது. வழக்கு விசாரணை சிபி ஐ, போதை தடுப்பு பிரிவு, அமலாக்க துறை என 3 மத்திய அமைப்பு களுக்கு சென்றது.
ரியா சக்ரபோர்த்தியை 3 அமைப்புகளும் கிடுக்கிபிடி போட்டு விசாரிக்கிறது. சில விஷயங்களை ஒப்புக்கொண்ட ரியா இன்னும் பல விஷயங்களை மூடி மறைப் பதாக அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தி ருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோ ரிடமும் விசாரணை நடத்தப் பட்டது. பிறகு போதைப் பொருள் தடுப்பு போலீ சார் அவர்களை கைது செய்தனர்.
நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் கடந்த சில நாட்களாக போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விசாரணை நடத்திய நிலை யில் நேற்று (செப்டம்பர் 8ம்தேதி) திடீரென கைது செய்தனர்.
நேற்று இரவு ரியாவை மும்பை சயான் மருத்துவமனைக்கு கொரோனா உள்ளிட்ட உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டர். பின்னர் வீடியோ கான்பரஸ் மூலம் மாஜிஸ்திரேட் முன் ரியா ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டிருக்கிறது. பைகுல்லா சிறையில் இன்று அடைக்கப்படுகிறார்.