படத்தை ஏற்க மறுத்த பிரபல ஒளிப்பதிவாளருக்கு பிரபல நடிகை அளித்த பதில் - ஹீரோயினகுக்கும் கேமராமேனுக்கும் என்ன மோதல்?

by Chandru, Sep 9, 2020, 10:11 AM IST

நடிகை கங்கனா ரனாவத் பேச்சுத்தான் கடந்த சில மாதமாக திரையுலகம் முழுவதும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணியாக நடித்தபோதே அப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷிடம் மோதல் ஏற்பட்டது. சில காட்சிகளை ரீஷூட் செய்யும்படி கங்கனா கேட்டபோது கிருஷ் மறுத்து வெளியேறினார். பின்னர் இயக்குனர் பொறுப்பை கங்கனாவே ஏற்றுக்கொண்டு படதை இயக்கி முடித்தார்.


தற்போது இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது புகார் கூறியதுடன், பாலிவுட்டில் போதை பொருள் உபயோகம் இருக்கிறது என்று கூறி பரப்பை ஏற்படுத்தினார். மேலும் மகராஷ்டிரானவை ஆளும் சிவசேனா கட்சியினர் மீதும் சரமாரியாக புகார் கூறி வருகிறார். மும்பை பாகிஸ்தான் ஆக்ரமிப்பாக இருக்கிறது என்று கங்கனா தெரிவித்திருந்தார். இவ்வாறு கூறியதற்கு கங்கனா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் மும்பைக்கு கங்கனா வந்தால் அவர் மீது தேச துரோக வழக்கு பாயும் என்றும் சிவசேனா எம் எல் ஏ கூறினார்.


இந்நிலையில் கங்கனா தனக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவை என கேட்டிருந் தார். மத்திய அரசின் உள்துறை அமைச்ச கம் உடனடியாக கங்கனாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்தது.


இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தை ஏற்க மறுத்தது குறித்து தெரிவித்தார். 'இந்தி படம் ஒன்றை நான் ஏற்க மறுத்துவிட்டென். நடிகை கங்கனா அதில் நடிக்க இருந்தார். அது எனக்கு அசவுகரியமான நிலையாக இருந்தது. பட தயாரிப்பாளர்களிடம் இதனை சொன்ன போது அவர்கள் புரிந்து கொண்டார்கள். மனதில் எது சரியெனபடுகிறதோ அதுவே முக்கியம். அந்தப்படக் குழுவுக்கு எனது வாழ்த்துகள் எனக் கூறியிருந்தார்.


எதற்காக கங்கனா படத்தை பிசி ஸ்ரீராம் ஏற்க மறுத்தார் என்ற நிஜ காரணத்தை அவர் கூறாவிட்டாலும் பிசியின் இந்த டிவிட் நெட்டில் வைரலானது.


பிசி ஸ்ரீராமின் இந்த டிவிட்டிற்கு பதில் அளித்திருக்கிறார் கங்கனா ரனாவத். அதில், 'நீங்கள் ஒரு சாதனையாளர். உங்களிடம் பணி புரியும் வாய்ப்பு கிடைக்காமல்போனது பெரிய இழப்பு. என்னால் உங்களுக்கு என்ன அசவுகரிய மான நிலை என்று எனக்கு தெரிய வில்லை. . ஆனாலும் நீங்கள் சரியான முடிவு எடுத்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள என தெரிவித்துள்ளார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை