சினிமா தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கத் தலைவர் பாரதிராஜா மற்றும் 40க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இணைந்து தியேட்டர் அதிபர்களுக்கு நேற்று சில கோரிக்கை விடுத்தனர், அது தற்போது இரு தரப்புக்கு மான மோதலாக மாறி இருக்கிறது.
தியேட்டரில் படங்களை ரீ ரிலீஸ் செய்வது, நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை மாற்றக்கூடாது. விபிஎஃப் கட்டணம், விளம்பர வருவாய், டிக்கெட் முன்பதிவு என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு அது பற்றி உறுப்பினர்களுடன் ஆலோசித்துவிட்டு பதில் தரவேண்டும் இல்லாவிட்டால் புதிய படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாது என தெரிவித்திருந்தனர்.
இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, புதிய படங்களை வெளிடா விட்டால் தியேட்டர்கள் கல்யாண மண்ட பமாக மாற்றுவோம், ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் திரையிடுவோம். டிவி, ஒடிடியால் ஒரு ஹீரோவை கூட உருவாக்க முடியாது; என காட்டாமாக பதில் அளித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
பாரதிராஜா தலைமையில் தயாரிப்பா ளர்கள்வைத்திருக்கும் கோரிக்கைகள் ஏற்க இயலாத காரியம். தியேட்டரில் படங்களைத் திரையிட மாட்டோம் என்கிறார்கள். அவர்கள் பணத்தைப் போட்டு படம் எடுக்கிறார்கள் அந்த படத்தை ரிலீஸ் செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். படத்தை வெளியிட்டாக வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.
சினிமா தியேட்டர்களில் ஐபிஎல் மேட்ச் காட்டுவது, கல்யாண மண்டபமாக்குவது என்று நாங்கள் மாறிக்கொள்கிறோம். உங்களுக்கு ஒடிடி என்று வழியிருந்தால் எங்களுக்கும் வேறு வழி இருக்கிறது. கோரிக்கை அனுப்பிவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள் பேச்சு வார்த்தைக்கு இடமே கிடையாது.
தயாரிப்பாளர்கள் விபிஎஃப் பணம் கட்டுவது பற்றித் தெரியாது. சேவை வழங்குபவர்கள்தான் (Service Providers) தான் எங்களுக்குப் படங்களும் (content) தருகிறார்கள். தயாரிப்பாளர்கள் ஆரம்பக் காலத்தில் பிரிண்ட் போட்டு நேரடியாக தியேட்டர்களுக்கு படம் கொடுத்தார்களோ, அதே போல் Service Providers-ம் கொடுக்கிறார்கள்.
படம் பிரிண்ட் போட ரூ 65 ஆயிரம் ஆனது அதை Service Providers 15 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கினார்கள். உடனே தயாரிப்பாளர்கள் படத்தை அங்குச் சென்றார்கள். இப்போது 15 ஆயிரம் ரூபாயையும் கட்ட மாட்டோம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் 400 பிரிண்ட் தான் போடுகிறார்கள். இந்தியில் ஒரு படத்துக்கு 2000 பிரிண்ட் போடுகிறார்கள். அவர்கள் விபிஎஃப் பணம் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியிலும் கட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இப்படி பேசுகி றார்கள். ஓடிடி தளங்களிலோ, தொலைக் காட்சியிலோ ஒரு ஹீரோவை உருவாக்க முடிந்ததா?. திரையரங்கம்தான் சினிமாவுக்கு முக்கியமான தளம். அங்குப் படங்கள் வெளியிட்டால் மட்டுமே நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்க முடியும்.
தயாரிப்பாளர்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தமிழகத்தில் திரையரங்குகள் குறைந்து, பல மூடப்பட்டுவிடும்.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.