பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.. மாரடைப்பில் உயிர் பிரிந்தது..

by Chandru, Sep 10, 2020, 15:02 PM IST

டிவிக்களில் தோன்றி புகழ் பெற்றவர் வடிவேல் பாலாஜி. இவர் வடிவேல் பாணியில் தனது உடை அலங்காரம், நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்துவார். இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 2 மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு போதுமான வசதி இல்லாத நிலையில் ஓமந்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்கு கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பிறகு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார். வடிவேலு பாலாஜிக்கு 45 வயதாகிறது. 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். பந்தயம், சுட்ட பழம், காதல் பஞ்சாயத்து போன்ற சில படங்களில் வடிவேலு பாலாஜி நடித்திருக்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News