ராணுவ வீரரின் வீரமரணம், உயிர்தியாகம் பற்றி நடிகர் உதயா எழுதி முதல் முறையாக இயக்கி நடித்த "செக்யூரிட்டி" குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியீடு செய்வதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் "செக்யூரிட்டி" படத்தைப் பார்த்து உதயாவை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதம் அளித்தார்.
மேலும் பிஜேபி மாநில தலைவர் எல்.முருகன், பல அரசியல் பிரமுகர்களும் திரையுலக ஜாம்பவான்கள் பத்திரிகை, இணையதளம் ஊடகங்கள் பாராட்டியுள்ளனர்.
"செக்யூரிட்டி"இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு சமர்ப்பணம் ஆன குறும் படமாக எடுக்கப்பட்டுள்ளது இப்படத்தைப் பார்த்து எங்கள் சோகத்திலும் ஒரு சந்தோஷத்தை "செக்யூரிட்டி" குறும்படம் ஏற்படுத்தியுள்ளது என்று மறைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி, குடும்பம் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் அனைத்து விருதுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், போர்ட் பிளேயர் சர்வதேச திரைப்பட விழாவில் (PORT BLAIR INTERNATIONAL FILM FESTIVAL மற்றும் COSMO FILM FESTIVAL ) "செக்யூரிட்டி" குறும்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 20 நாடுகள் கலந்து கொள்ளும் திரைப்பட போட்டிகளில் "செக்யூரிட்டி" தேர்வாகியுள்ளது குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.