பிரபல நடிகையை காதலிக்கும் விஜய்,அஜீத் பட வில்லன்.. நெருக்கம் காட்டி லவ்வுக்கு பச்சை கொடி அசைக்கிறார் ஹீரோயின்..

by Chandru, Sep 12, 2020, 16:49 PM IST

தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம் வால். கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு சொந்தக்காரரான இவர் அஜீத் நடித்த பில்லா 2 படத்திலும் வில்லனாக நடித்தார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உள்படப் பல படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் நடித்துள்ளார். வித்யூத் ஜாம்வாலுக்கு நடிகை அதா சர்மா மீது காதல் பிறந்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில்,அதா சர்மா எனக்குத் தோழி மட்டுமல்ல, நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பானவர்கள், ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டவர்கள். அதா சர்மா போன்ற ஒருவரை நான் விரும்புகிறேன் என்றார் வித்யூத். தற்போது இன்னும் நெருக்கமாகக் கருத்து தெரிவித்திருக்கும் வித்யூத் நான் இப்போது காதலில் விழுந்துள்ளேன். இப்போதுதான் காதலிக்க ஆரம்பித்துள்ளேன் எனக் கூறி உள்ளார்.

அதா சர்மா இதுபற்றி பதில் எதுவும் சொல்லாவிட்டாலும் அவர் லவ்வுக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் ஜாலியாக சுற்றித் திரியும் படங்கள் நெட்டில் வலம் வருகின்றன.அதா சர்மா தமிழில் பிரபுதேவா நடித்த சார்ளி சாப்லின் 2 படத்தில் நடித்திருப்பதுடன் சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ஆவார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை