நடிகை மியா ஜார்ஜ் திருமணம் இன்று எர்ணாகுளத்தில் நடந்தது

by Nishanth, Sep 12, 2020, 16:59 PM IST

பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ், அஷ்வின் பிலிப் திருமணம் இன்று கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள சர்ச்சில் நடந்தது.கோட்டயம் அருகே உள்ள பாலா என்ற இடத்தை சேர்ந்த மலையாள நடிகை மியா ஜார்ஜுக்கும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஷ்வின் பிலிப்புக்கும் கடந்த 3 மாதங்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் எர்ணாகுளத்திலுள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் இவர்களது திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்திற்காக சர்ச்சுக்கு வரும் போது மியா ஜார்ஜ் முகக் கவசம் அணிந்திருந்தார்.சர்ச்சுக்குள் நுழைந்த பிறகே அவர் முக கவசத்தைக் கழட்டினார். கொரோனா காலம் என்பதால் இந்த திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மாலையில் கொச்சியிலுள்ள ஒரு ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை