பிரபல இசை அமைப்பாளர், ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருது வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கிலாந்து நிறுவனம் ஒன்றிற்கு செல்போன் ரிங்டோன்களுக்கான இசை அமைத்துதரக் கோடிகளில் சம்பளம் பெற்றார். அந்த சம்பளத்தை அப்படியே தனது அறக்கட்டளையில் சேர்த்துவிட்டார். அதற்கான வருமான வரி கட்டவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இதுபற்றி விளக்கம் அளிக்கக் கேட்டு ரஹ்மானுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
இந்நிலையில் ரஹ்மான் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
வரி விவகாரத்தில் ஏற்கனவே அது செலுத்தப்பட்டிருக்கிறது. கல்வி, ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் தலைமை ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் கீழ்மட்ட பிரிவினரை மேம்படுத்தும் நோக்குடன் 2006 ஆம் ஆண்டில் அடித்தளம் நிறுவப்பட்டதாக ரஹ்மானின் அறக்கட்டளை கடந்த 14 ஆண்டுகளில், மாணவர்கள், ஓய்வு பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமீபத்தில், கோவிட் -19 தொற்றுநோய்களின் வாழ்க்கையை நாங்கள் உதவிகள் அளித்திருக்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.