நடிகை ரஜீஷா விஜயன் படப்பிடிப்பிலிருந்து பகிர்ந்த தனுஷ் பி.டி.எஸ் படம் வைரல்..

by Chandru, Sep 12, 2020, 16:24 PM IST

நடிகை ரஜீஷா விஜயனா? புது பெயராக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம் இவர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மெல்லப் படப்பிடிப்புகள் தொடங்கி வருகின்றன, வேறு வழியில்லாமல் தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தைப் பற்றிய தகவல்கள் மட்டுமே ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்டு முடித்து புதிய தகவலுக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் கர்ணன் படப்பிடிப்பிலிருந்து பி.டி.எஸ் படத்தைப் பகிர்ந்துள்ளார் ரஜீஷா.

தனது சமூக ஊடக பக்கத்தில் இன்று காலை நடிகை ராஜீஷா விஜயன் படப்பிடிப்பிலிருந்து பி.டி.எஸ் படத்தை வெளியிட்டார். அதைக் கண்டு தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்படத்தை ரீடிவிட் செய்து வைரலாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பிடிஎஸ் படத்தில் பட இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ், யோகி பாபு உள்ளிட்ட குழுக்கள் படமாக்கப்பட்ட ஷாட் திருப்தியாக இருக்கிறதா என்று கவனித்து வருகிறார்கள்.

இதில் மலையாள இயக்குனர் லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் நடராஜன் சுப்பிரமணியம், லட்சுமி பிரியா, சந்திர மவுலி மற்றும் கவுரி கிஷேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.1991 ஆம் ஆண்டில் கோடியன் குளத்தில் நடந்த ஒரு சாதி கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு கர்ணன் கதை அமைந்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த சம்பவம் பல ஆண்டுகள் கோர்ட் வழக்கிலிருந்து வந்தது என்பதால் படம் பரபரப்பானதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


More Cinema News

அதிகம் படித்தவை