முதல்வன் படத்தில் முதலில் விஜய்தான் நடிப்பதாக இருந்தது, ஆனால் அர்ஜூன் எப்படி வந்தார்- இயக்குனர் வெளியிட்ட சீக்ரெட்..!

by Chandru, Sep 14, 2020, 17:43 PM IST

சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியா தளவுக்கு ஒன்றிப்போய் இருக்கிறது. பல ஹீரோக்கள் படங்களில் அரசியல் பேசுகின்றனர். சில ஹீரோக்கள் அரசியல் கதைக்களங்களில் நடிக்கி றார்கள். சில வருடங்களுக்கு முன் இல்லை.. இல்லை.. பல வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படம் திரைக்கு வந்தது. அர்ஜூன் ஹீரோவாக நடித்திருந்தார். ரகுவரன் முதல்வராக நடித்திருந்தார். ரகுவரனை பேட்டி எடுக்கும் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்று அதிரடி நடவடிக்கைகள் எடுப்பார். முன்னதாக இந்த கதையில் விஜய்யை நடிக்க வைக்க ஷங்கர் எண்ணினார். ஆனால் விஜய் நடிக்கவில்லை. அப்போது என்ன நடந்தது என்று ஷங்கர் விளக்கி இருக்கிறார்.


முதல்வன்' படத்திற்காக விஜய்யை நடிக்க ஷங்கர் தனது குரு மற்றும் விஜய் யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தனக்கு தெரிந்தவர் ஒருவர் மூலம் அணுகி கேட் டார். ஆனால் அந்த பேச்சு வார்த்தை இருதரப்பிலும் சரியாக அமையாமல் போய்விட்டது. பின்னர் ஒருமுறை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் சிறந்த தொரு பட வாய்ப்பை இழந்ததைப் எண்ணி கவலைப்பட் டார். ஷங்கரே நேரடியாக விஜய்யிடம் பேசி இருக்க வேண்டும். அப்போது இந்த படம் சாத்தியமாகி இருக்கும் என்று சந்திர சேகர் தெரிவித்தார்.


அதேபோல் இப்படத்தில் ரஜினியை நடிக்க கேட்டபோது அப்போதிருந்த அரசியல் சூழலில் அவர் மறுத்து விட்டார் என்றும் ஒரு பேச்சு இருக் கிறது. ஆனாலும் பின்னாளில் ரஜினி. விஜய் இருவருமே ஷங்கர் இயக்கத்தில் நடித்தனர். அந்த படமும் அரசியல் படம் கிடையாது. நண்பன் படத்தில் நடித்தார் விஜய். சிவஜி, எந்திரன் என 2 ஷங்கர் படங்களில் நடித்தார் ரஜினிகாந்த்.


தற்போது அரசியல் களமே புதிதாக மாறி இருக்கிறது.ஆனாலும் ரஜினி அரசியல் கதையில் அதிக கவனம் செலுத்தவில்லை ஆனால் விஜய் அவ்வப்போது தனது படங்களில் அரசியலை டச் செய்கிறார். கமல் ஹாசன் நடிக்க இந்தியன் 2ம் பாகம் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பிறகு விஜய் நடிக்கும் படமொன்றை ஷங்கர் இயக்குவார் என்று கோலிவுட்டில் பேச்சு உள்ளது. அது அரசியல் பின்னணி கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை