மெகா ஸ்டார் ஹீரோவின் சகோதர நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி..

by Chandru, Sep 15, 2020, 18:29 PM IST

தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு. இவர் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில் விழித்திரு, இந்திரஜித், வேட்டை போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் 'ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்திருந்தனர். நிஹாரிகாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சிரஞ்சீவி, ராம் சரண். அல்லு அர்ஜுன் எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


தெலுங்கு டிவி நிகழ்ச்சி ஒன்றில் நாக பாபு சில தினங்களுக்கு முன் பங்கேற்றார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் கொரோனா பாசிட்டிவ் எனத் தெரிந்தது.
நாகபாபு தற்போது மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி, இசை அமைப்பாளர் மரகதமணி போன்றவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்குப் பிறகு மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை