தமிழ் பட குணசித்ர நடிகர் கொரோனா தொற்றால் பலி..

by Chandru, Sep 15, 2020, 18:37 PM IST

தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் பிரபு நடித்த கும்கி, ஆனந்தி நடித்த கயல், மற்றும் தொடரி, பொதுவாக எம் மனசு தங்கம் போன்ற சுமார் 50 படங்களில் குணசித்ரம், அப்பா. தொழில் அதிபர் வேடங்களில் நடித்தவர் ப்ளோரண்ட் பெரைரா. இவர் கலைஞர் தொலைக் காட்சியில் பொது மேலாளராக பணியாற்றினார்.சமீபத்தில் ப்ளோரண்ட் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் சென்னையில் காலமானார். அவருக்கு 67 வயதாகிறது. அவரது மறைவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி, நடிகர் விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி உள்ளிட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பால சுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வருகிறது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை