தெய்வமகள் சீரியல் நடிகையை காணவில்லை போலீஸ் தேடுகிறது.. மாமியார் வீட்டில் திருட கணவருக்கு ஐடியா தந்தது அம்பலம்..

by Chandru, Sep 16, 2020, 17:02 PM IST

டிவி சீரியல்களில் பரபரப்புக்காகத் தினமும் ஒரு கிளைமாக்ஸ், சஸ்பென்ஸ் வைப்பார்கள் ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக டிவி நட்சத்திரங்களின் நிஜ வாழ்க்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சொந்த வீட்டில் கணவனைக் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை தற்போது காணாமல் போயிருக்கிறார். பண்ருட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயின் மகன். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த இவர் வாழ்வாதாரத்துக்காக டிவி சீரியல் நடிகைகளுக்கு கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

டிவி சீரியல் நடிகை சுசித்ராவை காதலிக்கத் தொடங்கிய மணிகண்டன் அவரை ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் இருவரும் கஷ்டப்பட்டனர்.இதையடுத்து சுசித்ராவை தனது சொந்த ஊருக்கு மணிகண்டன் அழைத்துச் சென்றார். சிறிது தயக்கத்திற்குப் பிறகு அவர்கள் திருமணத்தை மணிகண்டன் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் நகைகள், பணம் இருப்பதை சுசித்ரா தெரிந்துகொண்டார். சொந்த வீட்டில் இருக்கும் நகையைக் கொள்ளை அடிக்க மணிகண்டனுக்கு ஐடியா கொடுத்த சுசித்ரா அந்த பணத்தைக் கொண்டு ஷார்ட் ஃபிலிம் எடுத்து வெளியிடலாம் எனத் தெரிவித்திருக்கிறார். அதை மணிகண்டனும் ஏற்றுக்கொண்டார்.சில நாள் கழித்து தனக்குச் சென்னையில் வேலையிருப்பதாக மாமியார் வீட்டில் கூறிவிட்டுப் புறப்பட்டார் சுசித்ரா. அதன் பிறகு மணிகண்டன் சமயம் பார்த்து வீட்டிலிருந்த பணம் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றார்.

வீட்டில் பணம், நகை கொள்ளை போனதை அறிந்த மணிகண்டன் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் மணிகண்டன் கொள்ளை அடித்தது தெரிய வந்தது, அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதையறிந்து சுசித்ரா தலைமறைவாகி விட்டார். இவர் தெய்வ மகள் சீரியலில் நடிக்கிறாராம்.


More Cinema News

அதிகம் படித்தவை