சூப்பர் ஸ்டாருக்காக தயாரான கதையில் நடிக்கிறார் கமல்ஹாசன்.. பலமான வில்லனாக கைகோர்க்கும் பிரபல ஹீரோ யார் தெரியுமா?

by Chandru, Sep 17, 2020, 13:59 PM IST

பரபரப்பான ஆக்‌ஷன் கதையில் கமல் நடித்து வெகு நாட்களாகி விட்டது. கமலுடன் ஆக்‌ஷன் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் 232வது படத்தில் கைகோர்த்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார். ஹீரோயின் யார் என்ற அடுத்தடுத்த கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.முன்னதாக 2021ம் ஆண்டின் கொண்டாட்டமான படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்து.

கொரோனா வைரஸ் எல்லா திட்டத்தையும் கவிழ்த்துப் போட்டதுபோல் இந்த திட்டத்தையும் கவிழ்த்துவிட்டது.அண்ணாத்த படம் முடியாததால் ரஜினி காந்த்தால் கமல் படத்தில் நடிக்க முடியாமல்போனது. அந்த படத்தில் தான் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இதில் கமலுக்காகக் கதையில் சில மாற்றங்களும் கூடுதல் காட்சிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. கிராமத்துப் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை பின்னர் சிட்டிக்கு வந்து அரசியல் களத்துக்குள் புகுந்து அதிரிபுதிரி செய்யவிருக்கிறது.

கமல்ஹாசன் இயக்கி நடக்கவிருந்த படம் தேவர் மகன்2. இப்படம் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உருவாகவிருந்தது. இதில் நாசர் மகனாக விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். தற்போது அந்த படத்தை அப்படியே பெண்டிங் வைத்துவிட்டு லோகேஷ் கனகராஜ் படத்தில் கவனத்தைத் திருப்பி இருக்கிறார் கமல். இதில் விஜய் சேதுபதி பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனப் பேச்சு எழுந்துள்ளது. இது நெகடிவ் ரோலாக அமைக்கப்படுகிறது. ஆனால் இதுபற்றி கமல் தரப்பிலிருந்து இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.கமலுடன் எந்த படத்திலும் நடிக்கத் தான் ஆவலாக இருப்பதாக ஏற்கனவே விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம் படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். அப்படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இப்படம் வெளியானது. விஜய் நடித்த பிகில் படத்துடன் டஃப் பைட் கொடுத்து கைதி ஹிட்டானது. அந்த படம் கார்த்திக்கு பிரேக்காக அமைந்த தோடு லோகேஷுக் கும் பிரேக்காக அமைந்தது. அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ். மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து ரிலீஸூக்கு தயாராக உள்ளது. தியேட்டர்கள் திறந்தவுடன் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றனர்.


More Cinema News

அதிகம் படித்தவை