போதை மருந்து விவகாரம்: நடிகை ரகுல் ப்ரீத் ஐகோர்ட்டில் மனு.. சர்ச்சையில் நடிகையை கோர்த்துவிட்ட காதல் நடிகை..

by Chandru, Sep 17, 2020, 14:41 PM IST

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மரண வழக்கு பல்வேறு திருப்பங்களை கடந்துகொண்டிருக்கிறது. அவருக்குக் காதல் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது .சமீபத்தில் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் ரியாவை கைது செய்தனர்.

பாலிவுட் பிரபலங்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது பற்றி விசாரணையை ரியாவிடம் அதிகாரிகள் தொடங்கிய பிறகு அவர் பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 25பேர்களின் பெயர்களைத் தொடர்புப்படுத்தி இவர்களுக்கெல்லாம் பாலிவுட்டில் போதைப் பொருள் உட்கொள்ளுதல் மற்றும் போதை மருந்து விற்பவர்களிடம் தொடர்பில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் தன் பெயர் இழுக்கப்பட்டதால் ரகுல் பயத்தில் உள்ளார். அத்துடன் போதைப்பொருள் விவகாரம் குறித்து அவர் கடுமையாக மறுத்தார்.இன்று ரகுல் பிரீத் தனது வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளார், சட்ட அமைப்புக்கு வெளியே ஊடகங்கள் ஒரு விசாரணையை நடத்துவதாகவும், சட்ட அமைச்சக வழிகாட்டுதல்களுக்கு முரணாக ஊடகங்களில் தகவல்கள் வருவதாகவும் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை