சூர்யாவை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது?

by Chandru, Sep 17, 2020, 14:47 PM IST

சிறிய படங்கள் மட்டுமே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வந்த நிலையில் பிரபல ஹீரோக்கள் தங்களின் படங்களை மெல்ல மெல்ல தியேட்டர் திறப்பை எதிர்நோக்காமல் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முன் வருகின்றனர். சமீபத்தில் தான் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி இது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மற்றொரு பிரபல ஹீரோ ஒடிடி பக்கம் பார்வையைத் திருப்பி இருக்கிறார்.
சுந்தர் சி இயக்கிய 'ஆக்‌ஷன்' என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார் விஷால். இதில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த 2 திரைப் படங்களில் உடனடியாக சக்ரா வெளியாக உள்ளது. இப்படத்தை எம்.எஸ்.நந்தன் இயக்குகிறார். விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது.

ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்கிறார். சமீபத்தில் வெளியான சக்ரா டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தீபாவளிக்கு ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் தற்போது அமேசான் பிரைமில் OTT தளத்தில் சக்ரா வெளியாக உள்ளதாகக் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்ரா படத்தில் விஷால், ஷ்ரத்தாவுடன் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை