பிரபல ஹீரோவுக்கு கொரோனா தொற்று, மருத்துவமனையில் திடீர் அட்மிட்.. வெள்ளிவிழா படம் தந்த ஹீரோ..

by Chandru, Sep 18, 2020, 09:24 AM IST

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதை குடும்பத்தினர் வெளிப்படையாகச் சொல்லி சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகே பல பிரபலங்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பற்றியும் அதற்காகச் சிகிச்சை பெறுவது பற்றியும் தெரிவித்தனர்.கோலிவுட்டில் நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன். டோலிவுட்டில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இசை அமைப்பாளர் கீரவாணி ஆகியோரும் நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.

பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்குப் பிறகு தொற்றிலிருந்து மீண்டிருக்கிறார். ஆனால் அவரது உடல் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பிரபல நடிகர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

கரகாட்டக்காரன்படப் புகழ் நடிகர் ராமராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கரகாட்டக்காரன் போன்ற வெள்ளி விழா படங்கள் மற்றும் பல வெற்றிப் படங்கள் கொடுத்தவர் ராமராஜன். இவர் அதிமுகவில் சேர்ந்து பணியாற்றினார். அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராகப் பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

தற்போது பதவி, அரசியல் சினிமா என்று எதிலும் ஆர்வமில்லாமல் ஒதுங்கி இருக்கிறார்..
ராமராஜனுக்கு லேசான தொற்று அறிகுறிகளே தென்படுவதால் அவர் ஒரு சில தினங்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை