போதை மருத்து ஹீரோக்கள் பட்டியல் வெளியிட கங்கனா போல் பாதுகாப்பு கேட்கிறார் கவர்ச்சி நடிகை.. போலீஸ் நிலையம் முன் தர்ணா செய்த அந்த நடிகை யார் தெரியுமா?

by Chandru, Sep 18, 2020, 09:32 AM IST

கடந்த 2 வருடமாக டோலிவுட், கோலிவுட் நடிகர்கள் பற்றி பாலியல் புகார் கூறியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி. டோலிவுட்டில் நான் ஈ ஹீரோ நானி உள்ளிட்ட கிட்டதட்ட பெரும்பாலான ஹீரோகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னார். அதுபற்றி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீஸ் நிலையும் முன் ஆடை அவிழ்ப்பு போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினர். கோலிவுட் ஹீரோ விஷால், ராகவா லாரன்ஸ் போன்றவர்களின் மீது ஸ்ரீ ரெட்டி புகார் கூறினார். அவர் கொளுத்திப் போட்ட இது போன்ற பட்டாசு எதுவும் வெடிக்கவில்லை. எல்லாமே புஷ்வானம் ஆகிவிட்டது.

டோலிவுட்டில் பலருடைய பெயர்களை பாலியல் புகாரில் இழுத்துவிட்ட ஸ்ரீ ரெட்டி அங்கு மிரட்டல் வருவதாகச் சொல்லி சென்னையில் குடியேறினார். இங்கிருந்தபடியே குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்தார். இது இவரது வாடிக்கை என்று பலரும் கண்டு கொள்ளாமல் விட்டனர். இதில் சில காலம் அமைதியாக இருந்தார்.ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீ ரெட்டி எட்டு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் டோலிவுட்டில் போதைப்பொருள் மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் அதிகம் இருப்பதாகவும், காவல்துறை சரியான பாதுகாப்பு அளித்தால் சம்பந்தப்பட்ட பிரபலங்களின் பெயரைக் கூறத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.இதில் ரகுல் ப்ரீத் சிங்கை ஸ்ரீ ரெட்டி சீண்டி உள்ளார். போலீசார் ரகுலிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறி உள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் ரேவ் பார்ட்டிகளை நடத்தும் நட்சத்திர வாரிசுகள் பற்றியும் தனக்குத் தெரியும் எனக் கூறியிருக்கும் ஸ்ரீரெட்டி இந்த விவகாரத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் பாஜ அரசையும் பாராட்டி இருக்கிறார். சுஷாந்த் வழக்கில் சரியான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது அதற்கு சல்யூட் என்று தெரிவித்திருக்கிறார் டஸ்ரீரெட்டி பாலிவுட் போதை மருந்து விவகாரத்திலும் இன்னும் ஆளும் கட்சி மிரட்டாலாலும் தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கங்கனா ரனாவத் மத்திய அரசிடம் கேட்டு கமாண்டோ பாதுகாப்பு பெற்றார். அதேபாணியில் தற்போது ஸ்ரீ ரெட்டி தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை