லிட்டில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்க காத்திருக்கும் பிரபல இயக்குனர்கள்.. கிராமத்து கதையுடன் இணைகிறார் கபடி டைரக்டர்..

by Chandru, Sep 18, 2020, 10:22 AM IST

நடிகர் சிம்பு தனக்கென ஒரு பாலிசியை வைத்துக்கொண்டு நடிக்கிறார். கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் படங்கள் எதுவும் வரவில்லை. ஆனால் அவரைப் பற்றி எதிர்மறையான மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. 2020ம் ஆண்டில் தனது பாணியை மாற்றிக் கொண்டு அதிரடியாகக் களம் இறங்கினார். ஹன்சிகாவுடன் 'மஹா' மற்றும் வெங்கட் பிரபுவுடன் 'மாநாடு' படங்களில் நடிக்கிறார்.

இயக்குனர் கவுதம் மேனன், மிஷ்கின், பத்ரி வெங்கடேஷ் மற்றும் பலர் உட்படப் பல இயக்குநர்கள் சிம்புவுடன் பணியாற்ற ஆர்வம் காட்டி வருகிறார். மனோஜ் ,கே பாரதி இயக்கும் 'சிகப்பு ரோஜாக்கள் 2' படத்தில் கமல்ஹாசனுடன் அவர் சிம்பு கதாநாயகனாக நடிப்பது குறித்தும் பேசப்படுகிறது.

இதற்கிடையில் சுசீந்திரன் இயக்க விருக்கும் ஒரு புதிய திரைப்படத்தை நடிக்கச் சிம்பு ஒகே செய்துள்ளாராம். இது கிராமப்புற பின்னணி கதை. கிராமப் புற பின்னணியில் சிம்பு அதிகம் நடிக்கவில்லை. சுசீந்திரன் 'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' மற்றும் 'ஜீவா' உள்ளிட்ட பல பாராட்டப்பட்ட படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை