சாம்சங் கேலக்ஸி நோட் 20: ரூ.9,000க்கும் அதிகமான குறுகிய கால தள்ளுபடி..!

by SAM ASIR, Sep 18, 2020, 10:27 AM IST

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் தற்காலிகமாக ரூ.9,000/- விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.77,999/- விலையில் கிடைத்த கேலக்ஸி நோட் 20, செப்டம்பர் 23ம் தேதி வரைக்கும் ரூ.68,999/- விலையில் கிடைக்கும். எச்டிஎஃப்சி அட்டையின் மூலம் வாங்கினால் கூடுதலாக ரூ.6,000/- கேஷ்பேக் சலுகையும் உண்டு.

சாம்சங் கேலக்ஸி நோட்20 சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 6.7 அங்குலம்; எஃப்எச்டி (1080X2400) தரம்
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு: 256 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதிகரிக்கும் வசதி)
முன்புற காமிரா: 10 எம்பி ஆற்றல் கொண்ட ஒரு காமிரா
பின்புற காமிரா: 12 எம்பி + 64 எம்பி + 12 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
மின்கலம்: 4300 mAh

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி போர்ட், தொடுதிரையில் விரல் ரேகை உணரி, 26 மில்லி செகண்ட் லாட்டென்ஸி கொண்ட எஸ் பென் இவற்றுடன் 60 Hz ரெஃப்ரஷ் விகிதம் கொண்டது.செப்டம்பர் 23ம் தேதி வரைக்கும் சாம்சங் இணையதளம், சாம்சங் நேரடி விற்பனை நிலையம் மற்றும் முன்னணி இணைய விற்பனை தளங்கள், சில்லறை அங்காடிகளில் இச்சலுகை விலையில் வாங்கலாம்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Technology News