சத்தமில்லாமல் காரியத்தை முடித்த சிங்கம் நடிகையின் தடாலடி.. உஸ்ஸ்ஸ்... சைலண்ட்...

Anushkas Nishabdham or sailence OnPrime premieres October 2

by Chandru, Sep 19, 2020, 18:47 PM IST

சூர்யாவுடன் சிங்கம் படத்தில் நடித்த அனுஷ்கா எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சூர்யாவை திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா தனது விருப்பத்தை சூர்யாவிடம் சொல்லும் போது அவர தயக்கம் காட்டியதும் பேசாம, என் கழுத்திலே தாலிய கட்டிவிடு இல்லாவிட்டால் என்ன வேல முடிச்சிடேன்னு வீட்ல சொல்லிவிடு வேன் என்று பயமுறுத்துவார்.


சிங்கம் படத்தில் வரும் இந்த டயாலக் போல் அவர் நடித்திருக்கும் சைலன்ஸ் படத்தின் வேலை சைலண்ட்டாக நடந்து முடிந்து ஒடிடிக்கு விலை பேசப்பட்டிருக்கிறது. பாகுபலி படத்துக்கு பிறகு 2 வருடம் கழித்து அனுஷ்கா நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் நிசப்தம் என்கிற சைலன்ஸ். இதில் ஆர்.மாதவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத் திரைப் படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான் ப்ரைம் வீடியோ ரிலீஸ் உரிமை பெற்றிருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலென்ஸ் என்ற பெயரில் இப்படம் 2020, அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகளவில் வெளியாகவுள்ளது. ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

பேச்சு மற்றும் செவித்திறன் குறை பாடுள்ள கலைஞர், பிரபல-இசைக் கலைஞராக உள்ள அவரது கணவர் மற்றும் அவரது சிறந்த நண்பர் விசித்திர மான முறையில் காணாமல் போகிறார். இதை சுற்றி நகரும் ஒரு கதைக்களத்தை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும். இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோருடன் ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரலா ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக சைலன்ஸ் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஒடிடி தளத்தில் வெளியாகாது என்றும் பட தரப்பு கூறி வந்தது. தற்போது ஒடிடிக்கு பேசி சைலன்ட்டாக வேலையை முடித்திருக்கிறது படக் குழு.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை