ஹீரோயின் நடிப்பை எடிட்டிங் டேபிளில் பார்த்த எடிட்டர் வியப்பு..

Director Seenu Ramasami appriciate Actress Gayathri

by Chandru, Sep 19, 2020, 19:12 PM IST

சில வருடங்களுக்கு முன் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் திரைக்கு வந்தது. அதில் ஹீரோயினாக காயத்ரி நடித்திருந்தார். காயத்ரியின் மேக் அப்பை பார்த்து. ப்ப்பா பேய் மாதிரி இருக்கு யாரிது என்ற அதிர்ச்சியான ரியாக்‌ஷன் தருவார். அது பிரபலமானது. அந்த ஜோடி மீண்டும் மாமனிதன் என்ற படத்தில் இணைந்திருக்கிறது.

இப்படத்தின் எடிட்டிங் பணி நடந்து வருகிறது. இது குறித்து பட இயக்குனர் சீனுராமசாமி ஒரு மெசேஜ் வெளியிட்டுள் ளார். அதில் " மாமனிதன் கதாநாயகி எஸ்.காயத்ரி நடிப்பை எனது ஜீனியஸ் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் டேபிளில் பார்த்து முதல் பாராட்டு தெரி வித்தார். எங்கள் திரைப் படத்திற்கான காயத்ரியின் பாராட்டப்பட்ட நடிப்பை காணும் நாளைக் ஆவலாக நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருப்பதுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார். கமலின் 232வது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை