பெங்களுரில் போதை மருந்து கடத்தி விற்றதாக டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தொடர்ச்சியான விசாரணையில் கன்னட திரையுலகில் போதை பயன்பாடு இருப்பது தெரிந்தது.
பிரபல நடிகை ராகினி திவேதிக்கு போதை மருந்து விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிந்த நிலையில் அவரை போதை மருந்து தடுப்பு போலீஸார் விசாரணைக்கு அழைத்து கைது செய்தனர். இதையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணியை விசாரணைக்கு அழைத்தனர். அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதையடுத்து சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டர். இருவரும் பார்ப்பன அக்ரஹார சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரே அறையில் இருப்பதால் அடிக்கடி இவர்களுக்குள் மோதல் எற்படுகிறது. கடந்த வாரத்தில் அறையில் விளக்கு அணைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவரை திட்டித்தீர்த்தனர். சமாதானம் செய்ய வந்த பெண் போலீசையும் விரட்டினர். ராகினி, சஞ்சனா இருவருக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்கு சிகரெட் வேண்டும் என்று இருவரும் பெண் போலீசிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் ஆனாலும் சிகரெட்டெல்லாம் தரமுடியாது என்று அவர் மறுத்த தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ராகினி திவேதி பெங்களூர் நீதி மன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தி வருகின்றனர். அப்போது அவர் ஜாமீன் கோரி இருந்தார். அதேபோல் சஞ்சனா கல்ராணியும் ஜாமீன் கோரி இருப்பதால் இவருக்கும் ஜாமீன் கிடைக்குமா என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும். இருவரும் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
மேலும் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கிஷோர் அமன் ஷெட்டி, அகீல் நவ்ஷல் என் இருவர் கைது செய்யப்படுள்ளனர். அவர்களிடமிருந்து போதை மருந்துகள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. இவர்களில் கிஷோர் ஒரு நடன கலைஞர். பிரபுதேவா நடிப்பில் வெளியான ஏபிசிடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.