ரோஹித் உங்கள் கேப்டன்ஷிப் நன்றாகத்தான் இருக்கிறது ...ஆனால் நீங்கள் தோனியிடம் இன்னும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள் - வெற்றி வாய்ப்பு இருந்தும் மும்பை எப்படி தோற்றது?

Cskvsmi: IPL2020 Highlights, Scores, review

by Loganathan, Sep 20, 2020, 10:33 AM IST

இந்த ஆண்டின் 13 ஐபிஎல் சீசன் கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெறுகிறது .

இந்த நிலையில் சீசனின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே அபுதாபியில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

கடந்த ஆண்டில் நடைபெற்ற சீசனின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி வாகை சூடியது .

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டி பல எதிரிபார்ப்புகளோடு நடந்தது . மும்பை இந்தியன்ஸ் சீசனின் முதல் போட்டியில் இதுவரை அனைத்து போட்டிகளிலும் தோற்ற சாதனையை நேற்றைய போட்டியில் முறியடிக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மோசமான சாதனையை இன்னும் தன்வசமே வைத்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய தயாரானது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்ட்டன் -தி - காக் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் களம் கண்டவர். தொடக்கத்தில் மிக நேர்த்தியான பந்துகளை மற்றும் தேர்வு செய்து ஆடிய காக் மற்றும் ரோகித் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி தனக்கே உரித்தான பாணியில் 5 ஓவரை வீச பியூஷ் சாவ்லாவை அழைத்தார். இந்நிலையில் 4.4 பந்தில் கேப்டன் ரோகித் சாம் கரனிடம் கேட்சிசின் மூலம் பெவிலியனுக்கு நடையை கட்டினார்.

பின்னர் காக் உடன் உள்ளூர் வீரரான சூர்ய குமார் யாதவ் கைகோர்த்தனர். இவர்கள் நிதானமாக பார்ட்னர்ஷிப்புக்கு அடித்தளம் இடம் வேளையில் சாம் கரன் பந்து வீச்சில் காக் வாட்சனிடம் பிடிபட்டு 33 ரன்களுடன் ( 5 பவுன்டரி ) நடையை கட்டினார்.

பின்னர் களம் கண்ட சௌரப் திவாரி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரன்களை உயரவைத்தார் . இருவரும் சிறப்பாக ஆடிய போது தீபக் சஹர் வீசிய பந்தில் , தவறான ஷார்டால் சூர்ய குமார் யாதவ் 17 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஆனாலும் தனது போக்கை மாற்றாமல் தனது அதிரடியை தொடர்ந்து கொண்டிருந்தார் திவாரி . பின்னர் ஹர்திக் களம் காண ஆட்டம் இன்னும் சூடு பிடித்தது . தொடர்ந்து இரண்டு சிக்சர்களை தெரிக்கவிட்ட ஹர்திக் பாண்டியா அணியின் ஸ்கோரை இருவரும் மளமளவென உயர்த்தினர். எனவே 14 ஓவர் முடிவில் மும்பை அணி 121 / 3 ரன்களை எட்டியது.

இந்நிலையில் மிகப்பெரிய ரன் அடிக்கும் வாய்ப்பை மும்பை இடம் இருந்து 15 ஓவரில் பறித்தார் ரவீந்திர ஜடேஜா . 15 ஓவரின் முதல் பந்தில் திவாரி 42 ரன்களுடன் டுயூ பிளசில் இடம் கேட்ச் ஆகி நடையை கட்ட அதே ஓவரின் 5 பந்தில் ஹர்திக் பாண்டியாவும் பெவிலியன் திரும்பினார். இதனால் மும்பை அணி 15 ஓவர் முடிவில் 124/5 என்ற இக்கட்டான நிலையை எட்டியது.

எனினும் களத்தில் பொல்லார்ட் இருந்ததால் அணியின் ஸ்கோர் உயர வாய்ப்பிருந்தது . பொல்லார்ட் உடன் க்ருனால் பாண்டியா 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிங்கி இங்கிடி வீசிய 17 வயது ஓவரின் முதல் பந்தில் விக்கட் கீப்பரிடம் அவுட்டானார். ஒருபுறம் கணிசமான ரன்களை சேர்த்து கொண்டிருந்த பொல்லார்ட் 18 ரன்னில் இங்கிடியின் 19 வது ஓவரின் முதல் பந்தில் தோனியிடம் கேட்ச்சாகி வெளியேறினார். இதனால் அணியின் ஸ்கோர் 151/7 என்ற நிலையை எட்டியது . இதே ஓவரின் 5 வது பந்தில் ஜேம்ஸ் பேட்டின்சன் 11 ரன்களில் டியூ பிளசில் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார் எனவே 19 ஓவர் முடிவில் மும்பை அணி 156/8 என்ற நிலையை எட்டியது. கடைசி ஓவரை வீச வந்த தீபக் சஹர் தனது முதல் பந்தில் ட்ரன்ட் போல்டை , போல்ட் செய்து பெவிலியன் அனுப்பினார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 162/9 ரன்களை எடுத்தது. 163 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

2 வது இன்னிங்க்ஸ் ஆட தொடங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் களம் இறங்கினர். ஆனால் ஆமை வேகத்தில் விளையாடிய சென்னை அணியின் ஓப்பனர் ஷேன் வாட்சனை, முதல் ஓவர் வீசிய ட்ரன்ட் போல்ட் கடைசி பந்தில் lbw முறையில் அவுட் ஆக்கினார். இதே முறையில் முரளி விஜய் அவர்களும் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் , ஜேம்ஸ் பேட்டின்சன் வீசிய பந்தில் பெவிலியின் திரும்பினார்.இதனால் சென்னை அணி 6/2 என்று திணறியது. இந்நிலையில் அம்பத்தி ராயுடு மற்றும் டியூ பிளசில் இருவரும் கைகோர்த்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர்.

சுலபமாக வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் , அதனை கோட்டை விட்டார் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் அவர்கள்.

2 வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறினர் மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் . கடைசியாக 16 வது ஓவரின் கடைசி பந்தில் அம்பத்தி ராயுடு 71 (6 பவுன்டரி , 3 சிக்சர்) ரன்களில் ஆட்டமிழந்தார். அதுவரை நிதானமாக ஆடிய டகயூ பிளசில் பின்னர் அதிரடியை தொடங்கினார்‌.

பின்னர் சென்னை அணி மிக சுலபமாக 164 ரன்களை 4 பந்துகள் மீதமிருக்கும் போதே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது .

6/2 என்ற நிலையில் திணறிய சென்னை அணியின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சரியான திட்டங்களை நிகழ்த்தவில்லை மேலும் அவர் ஹர்திக் பாண்டியா அல்லது பொல்லார்ட் இருவரையும் பந்து வீச அழைக்காததும் தோல்விக்கு மிக முக்கியமான காரணம். ஒருவேளை இவர் இருவரும் பந்து வீசியிருந்தால் வெற்றி வாய்ப்பை மும்பை இழந்திருக்காது.

கடந்த சீசனின் தோல்வியை இந்த சீசனில் பழி தீர்த்துக் கொண்டது சென்னை அணி.

ஆட்டநாயகனாக அம்பத்தி ராயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.

You'r reading ரோஹித் உங்கள் கேப்டன்ஷிப் நன்றாகத்தான் இருக்கிறது ...ஆனால் நீங்கள் தோனியிடம் இன்னும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள் - வெற்றி வாய்ப்பு இருந்தும் மும்பை எப்படி தோற்றது? Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை