2 வருடத்துக்கு பிறகு நடிக்கும் த்ரில் பட டிரெய்லரில் பாகுபலி நடிகை தரிசனம்.. எப்படி இருந்த அனுஷ்கா இப்படி ஆயிட்டார்..

Advertisement

பாகுபலி 2ம் பாகம் படத்துக்குப் பிறகு அனுஷ்கா 2 வருடம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அவர் உடல் வெயிட் போட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நடித்திருக்கும் சைலன்ஸ் பட டிரெய்லரில் அவரது புதிய தோற்றம் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லரின் சைலன்ஸ் பட டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.

டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரிலும் தெலுங்கில் நிஷப்தம் என்றும் வெளியாகும் பன்மொழி த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தைத் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ஒரு ஆர்வத்தை உருவாக்கிய அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர். மாதவனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் சைலன்ஸ் (நிஷப்தம்) படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. சைலன்ஸ் என்ற தலைப்பில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகும் இந்த படம் மைக்கேல் மேட்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நடிகரின் உணர்ச்சிமிக்க பார்வையை வெளிப்படுத்தும் படத்தின் புதிய போஸ்டரையும் ஸ்ட்ரீமிங் சேவையானது வெளியிட்டது, இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் அமேசான் ப்ரைமில் படத்தை ஸ்டிரீம் செய்யலாம்.

சைலன்ஸ் கதை இதுதான்: செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாகப் பேய் இருப்பதாக நம்பப்படும் பங்களாவில் நிகழும் மோசமான சம்பவத்தைப் பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில் சிக்கிக் கொள்கிறார். துப்பறியும் போலீஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார் செய்கின்றனர். கடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுனிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>