பிரபல பிக்பாஸ் நடிகையின் காலை சுற்றிய பாம்பு பரபரப்பு..

Advertisement

பிக்பாஸ் ஷோவில் பங்கேற்று தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை ஓவியா ஆர்மி என்ற பெயரில் உருவாக்க வைத்தவர் களவாணி நடிகை ஓவியா. படங்களில் வளர்ந்து வந்த நிலையில் பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலம் அடைந்ததுடன் அந்த ஷோவில் நடிகர் ஆரவுடன் காதல் கொண்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரேக் அப் ஆனது. இதில் மனம் உடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் அங்குள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். பிறகு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஷோவிலிருந்து வெளியில் வந்த பிறகும் ஆரவை ஓவியா காதலிப்பதாக கிசுகிசு உலவி வந்தது. நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் காதலிக்கவில்லை என்ற போதும் வருடக்கணக்கில் உலவிய கிசுகிசுவுக்கு சமீபத்தில் ஆரவ் முற்றுப் புள்ளி வைத்தார். ஏற்கனவே காதலித்து வந்த நடிகை ராஹி என்பவரை மணந்தார். இவர் கவுதம் மேனன் இயக்கும் ஜோஸ் வா இமைபோல் காக்க என்ற படத்தில் நடிக்கிறார். நடிகை ஓவியா கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை திருமணம் செய்ய மாட்டேன் என்று அறிவித்தார்.

ஓவியா சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறார். ஆனாலும் பட வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. தமிழில் ராஜ் பீமா, சம்பவம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத் தளத்தில் இவர் தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டிருக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் கணுக்காலில் பாம்பு சுற்றியிருக்கும் காட்சியையும் வெளியிட்டிருக்கிறார். பாம்பா, ஓவியா காலைச் சுற்றிக் கொண்டதா? என்று பதற வேண்டாம் அவர் தனது கணுக்காலைச் சுற்றி தன்னைத் தானே விழுங்கும் ஒரு டாட்டூ அணிந்திருக்கிறார். அதைத்தான் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். பாம்பு என்றால் படையே நடுங்கும் ஓவியா நடுங்க மாட்டாரா என்ன?

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>