எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு அரசு மரியாதை அளித்த முதல்வர்.. இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி..

Government Honour For SPB: Bharathiraja

by Chandru, Sep 26, 2020, 10:32 AM IST

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் செய்வதற்கு முன் முழு அரசு மரியாதை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவருக்குத் தமிழக திரை உலகின் சார்பாக பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்த் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுக் காலம் தாலாட்டிக் கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார் .ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000. அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு. இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளைப் பெற்ற இசை மேதை அவர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் இருந்த மாபெரும் சொத்து அவருடைய மனிதநேயம்.

எஸ் பி பாலசுப்பிரமணியத்தை எந்த இந்தியனும் ஒரு பாடகராக மட்டும் பார்த்ததில்லை . இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிப்பில்லாத சொத்தாகத்தான் பார்த்தார்கள். தமிழ் சினிமா உலகிற்குப் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்.பி பாலசுப்பிர மணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்கள் ஆன கலைஞர், எம்ஜிஆர். என் டி ராமாராவ் ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றவர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி ,எஸ் பி பாலசுப்ரமணியம் எப்படிப்பட்ட உறவினை எல்லா தலைவர்களோடும் வைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு விலைமதிப்பில்லாத அந்த இசைக் கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்குத் தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதைச் செயல்படுத்த முன்வந்துள்ள முதல்வர் அவர்களுக்குக் கலை உலகின் சார்பில் இசை ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நமது பாரதப் பிரதமரும் தமிழக முதல்வரும் கலைத் துறையினர் மீது எந்த அளவு அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும். அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு.
இவ்வாறு பாரதிராஜா கூறி உள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை