3 நாட்களில் கொரோனா கட்டுப்பாடுடன் முடிந்த ஷுட்டிங்..

Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான கபடதாரி படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று நிறைவடைந் துள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கொலைகாரன் படத் தை தொடர்ந்து ஜி. தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகும் படம் கபடதாரி. இவர் வெளியிடும் மற்றும் தயாரிக்கும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதால், கபடதாரி படத்திற்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு முடிவடையாமல் இருந்தது.
தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்ததையடுத்து, கபடதாரி படத் தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு, கடந்த 3 நாட்களில் சென்னைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.


அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றியும், 70-க்கும் குறைவான நபர்களை கொண்டும் இந்த மூன்று நாட்கள் படப்பிடிப்பையும் கபடதாரி படக்குழு நடத்தி முடித்துள்ளார்கள். இதில் கதாநாயகன் சிபிராஜ், ஜே.பி உள்ளிட்ட நடிகர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
வரும் நவம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள கபடதாரி குழுவினர், திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியான உடன், திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது குறித்து அறிவிக்க உள்ளார்கள்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியி ருக்கும் இப்படத்தின் கதை, திரைக் கதை, வசனத்தை ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த்ராவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளார்கள்.


சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத் தை கிரேட்டிவ் எண்டர்டெயின் மெண்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். சைமன் கே கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>