பிக்பாஸ்யில் பங்கேற்றதற்கான பாக்கி பணம் இன்னும் தரவில்லை.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..

by Chandru, Oct 1, 2020, 10:53 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 வருடமாக விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி நடத்தி வருகிறார். நடிகைகள் ஓவியா, ஆரவ் தொடங்கி வனிதா, கஸ்தூரிவரை பல பிரபலங்கள் இந்த ஷோவில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு 4வது சீசன் தொடங்க உள்ளது. இதில் கடலோர கவிதைகள் ரேகா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் கமல்ஹாசன் இந்த ஆண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அதில் பங்கேற்ற சில பிரபலங்கள் அவ்வப்போது சில குறைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் நடிகை மீரா மிதுன் சில புகார் கூறியதுடன் ஷோவை நடத்தவிடாமல் வழக்கு தொடர்வேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி அதிரடி புகார் கூறி உள்ளார். தனக்கு வரவேண்டிய பாக்கி இன்னமும் தரவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள மெசேஜில்.விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. கடந்த ஒரு வருடமாக எனது சம்பளத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகிட்டதே மனு மிஷன் குழந்தைகளோட ஆப்ரேஷன் செலவுக்காகத்தான். பொய்யான வாக்குறுதி அளிப்பீர்கள் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. இதைச் சற்றும் நான் எதிர்பார்க்கவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News