சூப்பர் ஸ்டாரின் படத்தில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட இளம் நடிகை

Sakshi Agarwal share deleted scenes from kala

by Chandru, Oct 2, 2020, 11:17 AM IST

சூப்பர் ஸ்டார் படமென்றாலும் காமெடி நடிகர் படமென்றலும் குறிப்பிட்ட நேரத்துக்கு, அதாவது இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்துக்கு மேல் காட்சிகள் நீண்டு கூடாது அது படத்தின் விறுவிறுப்பை குறைத்துவிடும் என்று இயக்குனர்கள் முடிவு செய்து தேவை இல்லாத காட்சிகளை நீக்குவது வழக்கம்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் காலா. இதில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடித்திருந்தார். சாக்‌ஷி அகர்வால் மருமகளாக நடித்திருப்பார். பா.ரஞ்சித் படத்தை இயக்கினார். சாக்‌ஷி அகர்வால் தனது வலைதள பக்கத்தில் காலா படத்திலிருந்து ஒரு ஸ்டில் வெளியிட்டிருந்தார். அதில் ரஜினிகாந்த் மாலையுடன் இருப்பார். அது அவர் மணிவிழா கொண்டாடும் காட்சி. ஆனால் இக்காட்சி படத்தில் இடம் பெறவில்லை.
இதுபற்றி சாக்‌ஷி அகர்வால் கூறும் போது, இந்த காட்சி காலா படத்திலிருந்து நீக்கப்பட்டாலும் அக்காட்சியில் சூப்பர் ஸ்டாருடன் நான் பங்கேற்றது என்றறைக்கும் என் மனதில் மறக்க முடியாத காட்சியாக நிலைத்திருக்கிறது என்றார்.


இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ் என இரண்டு படங்களை இயக்கி இருந்த நிலையில் கபாலி. காலா என ரஜினியின் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இரண்டு படங்களும் ஹிட் ஆனது. ரஜினிக்காக மற்றொரு படம் இயக்கவும் ரஞ்சித் ஸ்கிரிப்ட்டுடன் காத்திருக்கிறார். அது எப்போது நிறைவேறும் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை