சூர்யாவும், திரிஷாவும் இத செய்யணும்.. வில்லன் நடிகர் விடுத்த அன்பு கட்டளை.

Prakash Raj took part in Green India Challenge,

by Chandru, Oct 2, 2020, 11:27 AM IST

திரையுலகில் நடிகர், நடிகைகள் நட்பு என்பது சினிமாவுக்கு அப்பாற்பட்டு நீடிக்கிறது. தோசை சேலன்ஞ், ஐஸ் பக்கெட் சேலம்ஞ் என அடிக்கடி இணைதளத்தில் சவால்கள் பரவுகிறது. பக்கெட்டில் ஐஸ் கட்டியை நிரப்பி விட்டு அந்த நீரில் குளிக்க வேண்டும் இதுதான் ஐஸ்பக்கெட் செல்ன்ஞ் இதை ஹாலிவுட் நடிகை முதல் கோலிவுட் ஹன்சிகா வரை செய்தனர்.

அப்படி செய்தவர்கள் தங்களுக்கு தெரிந்த 3 நபர்களுக்கு அதை செய்யச்செல்லி செல்ன்ஞ் விட வேண்டும். அதேபோல் தான் தோசை செலன்ஞ்சும் நடிகர்கள் தோசை சுட்டு அதை தோழி, காதலி அல்லது மனைவிக்கு பரிமாற வேண்டும். இதிலும் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அந்தவரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இதுபோன்ற சேலஞ்சில் உருப்படியான ஒரு சவால் உருவானது. அதுதான் கிரீன் இந்தியா சேலன்ஞ். அதாவது தங்கள் வீட்டில் ஒரு மரத்தை நட்டுவிட்டு அதுபோல் 3 நபர்களுக்கு இந்த சேலன்ஜை செய்ய சிபாரி செய்ய வேண்டும்.


கடந்த ஒரு மாதத்துக்கு முன் நடிகர் மகேஷ்பாபு இந்த சவாலை நிறை வேற்றி நடிகர் விஜய்க்கு விடுத்திருந்தார். அதையேற்று விஜய்யும் தனது வீட்டில் மரம் நட்டார். அந்த புகைப்படங்கள் நெட்டில் வைரலானது. இந்த சவால் இன்னும் சினிமாவுலகில் சுழன்றுக் கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் மரம் நட்டார். அப்போது அவரது மகன் வேதாந்தும் உடனிருந்து உதவினார். அதன் பிறகு நடிகர் சூர்யா, திரிஷா, மோகன்லால் மூவருக்கும் சவால்விட்டு கிரீன் செலன்ஞ்சை நிறைவேற்ற வேண்டும் என மெசெஜ் பகிர்ந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
முன்னதாக பிரகாஷ் ராஜூக்கு கிரீன் சேலஞ்சை நிறைவேற்ற தெலுங்கு நடிகர் தணிகலபரணி சவால் வெளியிட்டிருந்தார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை