டப்பிங் ஸ்டுடியோவில் நடிகை அழுகை.. என்ன நடந்தது அம்மணிக்கு..

Senior Actress Saranya Breakdown at Dubbing Studio

by Chandru, Oct 6, 2020, 11:27 AM IST

ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. இதில் வி.ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார் ஹீரோயினாக மாளவிகா மேனன் நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் இப்படத்துக்கு டப்பிங் பேசும் போது திடீரென்று கதறி அழுதார். என்ன நடந்தது என்பதுபற்றி அவரே கூறினார்.

என்னைப் போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இது போன்ற படம் அமைவது மிகவும் அரிது, சமீப காலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது மட்டும் தான். விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்த படத்தில் உணர்ந்தேன். இதிலும் நாயகன் தம்பி வி.ராஜா புதிது ஆனால் நடிப்பில் அப்படித் தெரியவில்லை, சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்குப் பொருந்தியிருந்தார்.

இது ஒரு சிறந்த கதைக்களம், நான் படத்திற்கு டப்பிங் பேசும்போது கூட நான் என்னை அறியாமலே கண் கலங்கினேன் அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி படத்தில் உள்ளது.
இது போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தைத் தைரியமாகத் தயாரித்து, எனக்கு மகனாக, கதை நாயகனாக நடித்துள்ள தம்பி வி.ராஜாவிற்கு வாழ்த்துக்கள், அவர் மேலும் பல சமூக சிந்தனையுள்ள படங்களைத் தயாரித்து நடிக்கவேண்டும் இவ்வாறு சரண்யா கூறினார்.

தனது வைர வரிகளின் மூலம் அருவா சண்ட படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமான பாடல்களை எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து கூறும்போது, இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் இது போன்ற துடிப்பான இளைஞர்கள் சினிமா தயாரிக்க வருவது அதிசயம் தான். ஆனால் தம்பி வி.ராஜா ஒரு கறுப்புத் தமிழன் , அவர் தயாரித்து, கதை நாயகனாக வருவதில் எனக்குப் பெருமிதம். இந்த படத்தில் பாடல்கள் எழுதியுள்ளேன். அவையனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. சமூக புரட்சி கொண்ட சாதியப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்த தென்னாட்டுக் கருப்பு தமிழனுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

சென்சார் அதிகாரிகளின் பாராட்டுக்களுடன் " யூ " சான்றிதழ் பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தை ஆதிராஜன் இயக்கியுள்ளார். நாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.கவிப்பேரரசு வரிகளுக்குத் தரண் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சந்தோஷ் பாண்டி கவனிக்க, எடிட்டிங்கை வி.ஜே.சாபு ஜோசப் செய்துள்ளார், கலை சுரேஷ் கல்லேரி, ஸ்டண்ட் தளபதி தினேஷ், மற்றும் நடனத்தைத் தீனா மாஸ்டரும், ராதிகா மாஸ்டரும் அமைத்துள்ளனர்.ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் வி.ராஜா கதை நாயகனாக நடித்து, தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகள் திறப்புக்காகக் காத்திருக்கிறது.

You'r reading டப்பிங் ஸ்டுடியோவில் நடிகை அழுகை.. என்ன நடந்தது அம்மணிக்கு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை