பிரபல நடிகருடன் அனுஷ்கா திருமண போட்டோ வெளியானதால் ஷாக்.. ரசிகர் கேட்ட பரபரப்பு கேள்வி.

Anushka, Prabhas Marriage Photo: Fan Gives shock

by Chandru, Oct 7, 2020, 13:56 PM IST

நடிகை அனுஷ்கா என்றால் உடனே அடுத்த பெயர் ஞாபகத்துக்கு வருவது பிரபாஸ் பெயர்தான். பாகுபலி படத்துக்கு பிறகு 3 வருடம் கடந்த பிறகும் இவர்களைப்பற்றிய காதல் கிசு கிசு ஓய்ந்தபடில்லை. பாகுபலிக்கு பிறகு 2 வருடமாக அனுஷ்கா நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த ஆண்டுதான் சைலன்ஸ் (நிஷப்தம்) படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், அப்படமும் தியேட்டரில் வெளியாகாமல் ஒடிடி தளத்தில் வெளியானது.


சமூக வலைதளபக்கத்தில் நேரடியாக இணையாமலிருந்து வந்தார் அனுஷ்கா. அவரது பெயரில் ரசிகர்கள்தான் சமூக வலைதள பக்கத்தை கையாண்டு வந்தனர். இந்நிலையில் சில தினக்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அனுஷ்கா டிவிட்டர் பக்கத்தில் இணைந்தார். இணைந்த சில நாட்களிலேயே ஒரு மில்லியன் ஃபலோயர்களை பெற்றார். டிவிட்டர் பக்கம் மூலம் ரசிகர்களுடன் நேருக்கு நேர் அவர் உரையாடி வருகிறார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். ஒரு ரசிகர் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் திருமண கோலத்தில் அருகருகே அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த திருமணம் எப்போது நடந்தது என்றார். படத்தை கண்டு சக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ஆனால் அனுஷ்கா அதிர்ச்சி அடையாமல் பதில் அளித்தார்.


மிர்ச்சி தெலுங்கு பட படப்பிடிப்பின் போது பிரபாஸும் நானும் காட்சி பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்திருந்து எடுத்த புகைப்படம். இப்படம் என் மனத்துக்கு மிகவும் நெருக்கமான படம் யுவி கிரியேஷன் நிறுவனம் எடுத்த முதல் படம் என்று பதில் அளித்தார் அனுஷ்கா.மற்றொரு ரசிகர் கேட்டிருந்த கேள்விக்கு பதில் அளித்த அனுஷ்கா, பிரபாஸுடன் மீண்டும் சேர்ந்து படம் நடிப்பீர்களா என்கிறீர்கள். கதைக்கு இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். உங்கள் அன்புக்கு நன்றி என பதில் அளித்தார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை