தனி தீவுக்கு ஓடி ஒளிந்த பிரபல நடிகை.. டூ பீஸ் நீச்சல் உடையில் சுற்றித் திரிகிறார்..

Beach Bum Ileana DCruz Is Dreaming Of Her Happy Place

by Chandru, Oct 8, 2020, 10:53 AM IST

தளபதி விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. முன்னதாக கேடி என்ற படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் நடிக்கச் சென்று அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென இந்தி படங்கள் மீது மோகம் பிறந்தது. காஜல், தமன்னா முதல் பல நடிகைகள் இந்திக்குச் சென்ற நிலையில் இலியானாவும் இந்தியில் நடிக்கச் சென்றார்.

ரன்பீர் கபீர் ஜோடியாக பர்பி என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து அவர் தென்னிந்திய படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் இந்தி படங்கள் அவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை.
இலியானாவுக்கு ஒரு சில இந்தி படங்கள் தேடி வந்த நிலையில் அதன் பிறகு வாய்ப்புகள் முடங்கிப் போனது. ஒருவேளை இது சுஷாந்த்துக்கு நடந்தது போல் வாரிசு நடிகைகளின் வேலையாகக் கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதையும் மீறி வாய்ப்புகள் வந்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. திடீரென்று இலியானாவுக்குப் பட வாய்ப்புகள் நின்றது. இதில் மனம் உடைந்தவர் தனக்கு ஒரு துணை தேடினார்.

வெளிநாட்டு ஃபாய்பிரண்ட் ஆண்ட்ரி நியூபோன் உடன் டேட்டிங் செய்யத் தொடங்கி வருடக்கணக்கில் அவருடன் உறவைத் தொடர்ந்தார். அது காதலாக மாறியது. இன்னும் நெருக்கமாகப் பழகினார்கள். திடீரென்று பிரேக் அப் சொல்லி காதலை முறித்துக் கொண்டார். காதலன் பிரிந்ததிலிருந்து சோகத்தில் மூழ்கி இருந்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்த இலியானா முழுவதுமாக மூட் அவுட் ஆகி இருந்தார். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும் சமீபத்தில் தனியாக பிஜி தீவுக்குப் பறந்தார். அங்குச் சுதந்திரமாக டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து சுற்றித் திரிந்தவர் கடலுக்கு நடுவில் இருக்கும் மணல் திட்டுக்குச் சென்று அமர்ந்து அங்கிருந்த படி கடலின் வண்ணத்திலேயே நீச்சல் உடையும் கூலிங்கிளாசும் அணிந்திருக்கும் புகைப் படத்தை வெளியிட்டு தனிமையில் இனிமை காண்பதாகக் கூறி உள்ளார்.

பிறகு படகில் தனியாக அமர்ந்து அதை அவரே துடுப்பை நீரில் அடித்து ஓட்டிய படி, பொறுப்புகளிருந்து விலகி ஓடுகிறேன் என மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.இலியானா ஒரு வருடத்துக்கு முன் படங்கள் எதுவும் இல்லாததால் வீட்டில் உணவை வெளுத்துக்கட்டி குண்டம்மாபோல் வெயிட் போட்டார். அவரது தோற்றத்தைப் பார்த்து நெட்டிஸன்கள் வம்பிழுத்தனர். அதன் பிறகு மீண்டும் தனது உடற்கட்டை ஒல்லிபிச்சான்போல் மாற்றி கனக் கச்சிதமாக மாறி இருக்கிறார். புதிய தோற்றத்தை வெளிப்படுத்தும் பயணமாகவும் பிஜி தனிமை தீவு சுற்றுலாவைப் பயன்படுத்தி நீச்சல் உடையில் போஸ் தந்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் இலியானா வெளியிட்டிருக்கும் இந்த கிக்கான படங்கள் எந்த இயக்குனர் கண்களிலாவது பட்டு வாய்ப்பு தருவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை