சுல்தான் படத்தின் அப்டேட் தந்த ஹீரோ.. ரசிகர்களின் கனவு கன்னி தமிழில் என்ட்ரி..

Karthi Sulthan Shooting Finished

by Chandru, Oct 8, 2020, 17:31 PM IST

கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மிகா தமிழில் நிறைய ரசிகர்களுக்குக் கனவுக் கன்னியாகி வருகிறார். அவர் சுல்தான் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

சுல்தான் படத்தின் தகவல்கள் அவ்வப்போது வந்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த தகவலில் 90 சதவீதம் படம் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சுல்தான் படத்தின் எடிட்டிங் பணிகள் 90% முடிந்துவிட்டது என்றும், தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள மிகப் பெரிய பட்ஜெட் மற்றும் பொழுது போக்கு அம்சம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று எனவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருந்தார் அதன்பிறகு வேறு தகவல் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் ஹீரோ கார்த்தி வெளியிட்டுள்ள மெசேஜ் ரசிகர்களைத் திருப்தி அடையச் செய்துள்ளது. இதுபற்றி அவர் தெரிவித்துள்ள மெசேஜில், சுல்தான் முடிவடைந்தது. 3 வருடங்களுக்கு முன் கதையைக் கேட்டதிலிருந்து இன்று வரை இந்த கதை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. இது என்னுடைய பெரிய படமாக இருக்கும். இந்த படம் முடிவடைய முழு ஒத்துழைப்பு அளித்த எங்களது படக் குழுவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை