4 மொழியில் வெளியாகும் கோலிவுட் ஹீரோ படம் இன்று ரிலீஸ்.

Advertisement

விஜய் சேதுபதி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் க/பெ ரணசிங்கம். விருமாண்டி இயக்கினார். கடந்த 2 ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படம் இன்று மேலும் 4 மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இது குறித்து பட இயக்குனர் விருமாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நான் இயக்குநர் செல்வா அவர்களிடம் துணை,இணை இயக்குநராக பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளேன். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பில் KJR studios கோட்டப்பாடி J.ராஜேஷ் அவர்களின் தயாரிப்பில் க/பெ ரணசிங்கம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளேன். இத்திரைப்படம் கடந்த 2 ஆம் தேதியன்று DTH தளத்தில் ZEE PLEX லும் OTT தளத்தில் ZEE5லும் வெளியாகி உலகமெங்கும் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று (09-10-2020 ) வெளியாகவுள்ளது. தமிழில் மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நெகிழ்வான தருணத்தில் எனது தந்தை கலைமாமணி பெரியகருப்பத் தேவர், தாயார் அன்னமயில், என் வாழ்வில் அத்தனை சோதனையான காலகட்டதிலும் என்னை தாங்கிப் பிடித்த என் மனைவி செல்விக்கும், என் உடன் பிறந்த சகோதரர்கள் கார்த்திக் ,பால்பாண்டி , கோபாலகிருஷ்ணன் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் என்னுடன் பயணித்த பணி புரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் வசனகர்த்தா நண்பன் சண்முகம் முத்துசாமி, இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, ஒளிப்பதிவாளர் NK.ஏகாம்பரம், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன், படத்தொகுப்பு செய்த சிவாநந்தீஸ்வரன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா, நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் மற்றும் நண்பன் S.K.வெற்றிச் செல்வன், இயக்குனர் தம்பி தாஸ் ராமசாமி, மற்றும் எனது இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கு நன்றி. நீங்கள் சாத்தியப்படுத்திய வெற்றி சந்தோஷத்தை மட்டுமல்ல அடுத்த படத்திற்கான பொறுப்பையும் தந்துள்ளது. இனிவரும் எனது படைப்புகளுக்கும் உங்கள் அன்பையும் ஆதர வையும் வேண்டுகிறேன். இவ்வாறு இயக்குனர் பெ.விருமாண்டி கூறி உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>