எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா.. பிரபல நடிகர் வெளியிட்ட போஸ்டரால் பரபரப்பு..

vijay sethupathi released poster become controversy

by Chandru, Oct 10, 2020, 11:24 AM IST

இந்தி திணிக்கும் முயற்சி காலம் காலமாக நடந்து வருகிறது. அதற்கு தமிழகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அளித்த பேட்டியில் தனக்கு இந்தி தெரியாது என்று சொன்னதால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரால் அவமதிக்கப்பட்டேன். என்னைத் தீவிரவாதியை நடத்துவது போல் நடத்தினார் என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பல நட்சத்திரங்கள் இந்திக்கு எதிராக வாசகம் பொறிக்கப்பட்ட டிஷர்ட்கள் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதில் இந்தி தெரியாது போடா என வாசகம் இடம் பெற்றிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ள போஸ்டர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம் பேய் மாமா. இப்படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் பேய்போல் தோற்றமளிக்கும் யோகி பாபு அணிந்திருக்கும் டிஷர்ட்டில் எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவும் தெரியாது போடா என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. பேய் மாமா படத்தின் ஒளிப்பதிவைப் பன்னீர் செல்வம் ஏற்றிருக்கிறார். ராஜ் ஆர்யன் இசை அமைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தற்போது எஸ்பி ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் நடிக்கிறார். மாஸ்டர் படத்தில் விஜய் வில்லனாக வேடம் ஏற்கிறார். இது தவிர இவர் ஆமீர்கான் உள்ளிட்ட 2 இந்தி படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆனார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை