2வது மகள் அக்‌ஷராவுக்கு உலகநாயகன் செய்யும் உதவி..

kamalhasan release akshara movie trailer on 12 Oct

by Chandru, Oct 10, 2020, 11:30 AM IST

உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதுடன், தலைவன் இருக்கிறான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். இதற்கிடையில் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருகிறார். மகள்கள் இருவருமே படங்களில் நடித்து வரும் நிலையில் ஸ்ருதி ஓரளவுக்கு ஸ்டெடி ஆகிவிட்டார். அக்‌ஷரா ஹாசன் நல்ல படங்களில் நடித்து வந்தாலும் இன்னும் நிலையான இடத்தைப் பிடிக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அக்‌ஷாரவை பொறுத்தவரை அமிதாப்பச்சன் நடித்த ஷ்மிதாப் இந்தி படம் மூலம் அறிமுகமானார். பிறகு தமிழில் அஜீத் நடித்த விவேகம் படத்தில் நடித்தார். விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்தார். தற்போது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற புதிய படத்தில் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது பாட்டியாக பாப் இசை பாடகி உஷா உதூப் நடிக்கிறார். ராஜா கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

இப்படத்தின் டிரெய்லரை நடிகர் கமல்ஹாசன் வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இதனைப் பட நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதில்,அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் ட்ரெய்லரை வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்கு கமல்ஹாசன் வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்குக் கிடைத்த பெரியபேறு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் டீஸரை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டது நல்ல வரவேற்பு பெற்றது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை