கவர்ச்சி உடையுடன் போஸ் கொடுத்த மேலும் ஒரு நடிகைக்கு சிக்கல்...!

by Nishanth, Oct 10, 2020, 11:51 AM IST

மலையாள நடிகை அனஷ்வரா ராஜனை தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை எஸ்தர் அனிலையும் நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.சமூக இணையதளங்களில் நடிகைகள் லேசான கவர்ச்சி உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டால் அது சில நெட்டிசன்களுக்கு பொறுக்காது. அந்த நடிகையை ஆபாசமாகச் சித்தரித்து கருத்துக்களை வெளியிடுவது இவர்களது வழக்கம். இதேபோலத் தான் சமீபத்தில் மலையாள நடிகை அனஷ்வரா ராஜன் தன்னுடைய சில போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோவில் அவரது கால் தெரிகிறது என்று கூறி நெட்டிசன்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மீண்டும் அதே போல உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டார்.

நடிகை அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவு தெரிவித்து ரீமா கல்லிங்கல், அஹானா கிருஷ்ணா உள்படப் பல நடிகைகள், தங்களுக்கும் கால்கள் இருக்கிறது என்று கூறி கவர்ச்சி உடைகளை அணிந்த போட்டோக்களை வெளியிட்டனர். அதன்பிறகும் நெட்டிசன்களின் சீண்டல்கள் குறையவில்லை. இப்போது எஸ்தர் அனில் என்ற இன்னொரு மலையாள நடிகை தனது பேஸ்புக்கில் கால்கள் தெரியும் உடையுடன் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அவரது ஒவ்வொரு போட்டோவுக்கும் நெட்டிசன்கள் மிக ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

'இந்தப் பொண்ணை கேட்க யாருமே இல்லையா? அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என்னதான் வேலை? அவர்களுக்கு மகளைக் கவனிக்க நேரம் கிடையாதா? இதுபோன்ற உடையுடன் மீண்டும் போட்டோக்கள் வந்தால் நடப்பதே வேறு'.... இப்படி போகிறது நெட்டிசன்களின் மோசமான கமெண்ட்டுகள். மேலே கூறியது அனைத்துமே மிக சாதாரணமான வார்த்தைகள் தான். இதைவிட மோசமாகவும், மிகவும் ஆபாசமாகத் தனிப்பட்ட முறையிலும் கமெண்டுகளை தெரிவித்துள்ளனர். நெட்டிசன்களின் இந்த ஆபாச கமெண்டுகளுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எஸ்தர் அனில், மோகன்லாலுடன் 'ஒரு நாள் வரும்', 'திரிஷ்யம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரிஷ்யத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபநாசத்தில் இவர் கமல் மகளாக நடித்துள்ளார்.

Get your business listed on our directory >>More Cinema News