சண்ட கோழி நடிகரின் புதிய திட்டம்.

by Chandru, Oct 11, 2020, 12:27 PM IST

சண்டகோழி 2, ஆக்‌ஷன் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் தற்போது சக்ரா படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை எம்.எஸ்.நாதன் இயக்கினார். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்காததால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒடிடி தளத்தில் சக்ரா படத்தை வெளியிட பேசப்பட்டது.

இந்தநிலையில் விஷாலின் முந்தைய படமான ஆக்‌ஷன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ட்ரைடென்ட் ரவி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆக்‌ஷன் படம் பாக்ஸ் ஆபிஸில் 20 கோடியை வசூலிக்கத் தவறினால், நஷ்டத்தை தாங்குவதாக விஷால் ஒப்புக் கொண்டார். ஆனால் ஒப்புக்கொண்டபடி பணத்தை தரவில்லை. அதனை தர உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சமீபத்தில் சுமார் 8 கோடி 30 லட்சத்தை ரவிக்கு வழங்க வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டது. சில நாட்கள் பணிகள் தவிர. லாக் டவுன் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே சக்ரா படப்பிடிப்பு படக்குழு முடித்திருந்தது. மீதமிருந்த காட்சிகளும் தற்போது முடிக்கப் பட்டு பூசணிக்காய் உடைக்கப்பட்டது.சக்ரா படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் ஒரு வெளியாக உள்ளது. அடுத்த துப்பாறிவாளன் 2ம் பாகத்தை விஷால் இயக்கி நடிக்க முன்வருவார் என்று தெரிகிறது. முதலில் இப்படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார். அப்போது விஷால் மிஷ்கின் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அப்படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். இதையடுத்து விஷாலே இயக்குனர் பொறுப்பும் ஏற்றுக்கொண்டார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News