இளம் பெண்கள் பாலியல்‌ வன்கொடுமைக்கு தீர்வு.. பிரபல நடிகை அழைப்பு.

actress Trisha Discuss with youmg champion girls

by Chandru, Oct 12, 2020, 21:27 PM IST

பிரபல நடிகை திரிஷா யுனிசெஃப்‌ அமைப்பின்‌ குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராக இருக்கிறார். குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்கொடுமைகளையும்‌ முடிவுக்குக்‌ கொண்டு வருவதற்கான புதுமையான தீர்வுகளுக்கு அழைப்பு விடுத்தார்‌ திரிஷா.

குழந்தைத்‌ திருமணத்தை நிறுத்துவதிலும்‌, சமூகத்தில்‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்‌ மூலம்‌ குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை முடிவுக்குக்‌ கொண்டுவருவதிலும்‌ முனைப்புடன்‌ செயல்பட்ட செயல்வீரர்களான வளரிளம்‌ பருவத்தினர்‌ மற்றும்‌ இளைஞர்களை அவர்‌ இணையம்‌ வழியாகச்‌ சந்தித்து வாழ்த்தினார்‌. ஒரு வருடம்‌ முன்பு, ஆகஸ்ட்‌ 2019 இல்‌, த்ரிஷா,‌ குழந்தைகளைச்‌ சந்தித்து, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை முடிவுக்குக்‌ கொண்டு வருவதற்கும்‌, தொன்றுதொட்டு கலாச்சராமாய்‌ இருந்துவரும்‌ குழந்தைத்‌ திருமணம்‌ உள்ளிட்டவற்றை உடைத்து முடிவுக்குக்‌ கொண்டு வருவதற்கும்‌, குரல்‌ கொடுக்குமாறு கேட்டுக்‌ கொண்டார்‌. "குழந்தைத்‌ திருமணத்தின்‌ ஆபத்துகள்‌ மற்றும்‌ நீண்டகால தாக்கங்கள்‌ குறித்து தங்கள்‌ சமூகத்தில்‌ விழிப்புணர்வை ஏற்படுத்திய இளம்‌ சாம்பியன்களை சந்திப்பதில்‌ நான்‌ பெரு மகிழ்ச்சியடைகிறேன்‌.

குழந்தைகளை உடல்‌ ரீதியாகவும்‌, பாலியல்‌ ரீதியாகவும்‌ வன்கொடுமை செய்வதிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்க அவர்கள்‌ தங்கள்‌ சகாக்களுடன்‌ இணைந்து பணியாற்றினர்‌. கோவிட் 19 காலத்தில்‌ இவை அனைத்தும்‌ முயற்சி செய்யும்‌ நேரமாக இருந்தபோதிலும்‌, இது குழந்தைகளை எவ்விதத்திலும்‌ பாதிக்கவில்லை” என்று திரிஷா கூறினார்‌. “வளரிளம்‌ பருவத்தினர்‌ மற்றும்‌ இளைஞர்களின்‌ இந்த முயற்சிகள்‌ தைரியமானவை, பாராட்டத்தக்கவை. அவர்களின்‌ நம்பமுடியாத அளவிலான இந்த முயற்சிகளுக்கு வணக்கம்‌ செலுத்த இந்த வாய்ப்பை நான்‌ பயன்படுத்துகிறேன்‌. வளரிளம்‌ பருவ பெண்களுக்கான சவால்கள்‌ மற்றும்‌ வாய்ப்புகளை எதிர்கொள்வதன்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரிஷா, “முடிவெடுப்பவர்கள்‌ அவர்களைக்‌ கணக்கில்‌ கொண்டு, அவர்களுக்குச்‌ செவிசாய்த்து, அவர்களின்‌ கல்வி மற்றும்‌ திறன்களில்‌ முதலீடு செய்யும்‌ ஒரு சிறந்த உலகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது. காலத்தின்‌ கட்டாயத்‌ தேவை. பாலின அடிப்படையிலான வன்கொடுமை மற்றும்‌ குழந்தைத்‌ திருமணத்தை முடிவுக்குக்‌ கொண்டு வருவதற்கான புதுமையான தீர்வுகளை ஆராய்வோம்‌. ” என்று கூறினார்‌.

குழந்தைகளின்‌ முயற்சிகள்‌ குறித்து பேசிய யுனிசெஃப் தகவல்‌ தொடர்பு நிபுணர்‌ சுகாதாராய்‌ கூறுகையில்‌, “வளரிளம்‌ பெண்கள்‌ மற்றும்‌ சிறுவர்கள்‌ தனிநபர்‌ தகவல் தொடர்பு முதல்‌ வீதி நாடகம்‌ வரை, படப்பிடிப்பு நடத்த சுவரொட்டி படங்களை வடிவமைத்தல்‌ வரை, ஊடகங்களுடன்‌ வாதிட்டு அரசு நிர்வாகத்திற்கு மனு எழுதுவது வரை அனைத்து வித தொழில்‌ நுட்பங்களையும்‌ பயன்படுத்தினர்‌. இதன்‌ விளைவாக, சமூகத்தில்‌ குழந்தை திருமணம்‌ எதுவும்‌ இல்லை, குறிப்பாக கோவிட் 19 காலத்தில்‌. ” என்றார்‌ அவர்‌. தேசிய குடும்ப சுகாதாரக்‌ கணக்கெடுப்பு சுமார்‌ 150,000 குழந்தைத்‌ திருமணங்கள்‌ தமிழ்நாட்டில்‌ நடைபெறுகின்றன. குழந்தை வன்கொடுமை வழக்குகள்‌ அதிகரிப்பதை இக்கணக்கெடுப்பு குறிப்பிடுவதும்‌ மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. 2018 உடன்‌ ஒப்பிடும் போது 2019 ஆம்‌ ஆண்டில்‌ 50 சதவீத குழந்தை வன்கொடுமை வழக்குகள்‌ அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில்‌ 250 சதவீதம்‌ உயர்ந்துள்ளது.

You'r reading இளம் பெண்கள் பாலியல்‌ வன்கொடுமைக்கு தீர்வு.. பிரபல நடிகை அழைப்பு. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை