தேமுக பொதுச் செயலாளார் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். இதையடுத்து உஷாரான போலீஸார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் புறப்பட்டு விஜய காந்த் வீட்டுக்குச் சென்று அங்கு மூளை, முடுக்குகளிலும் மற்றும் வீடு முழுக்க சோதனை செய்தனர்.
இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பிறகு இது வெறும் புரளி என்று தெரியவந்தது. பின்னர் போலீஸார், போன் செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த், விஜய், அஜீத் ஆகியோர் வீடுகளில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அவை வெறும் புரளி என்று தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.விஜயகாந்த் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வீடு திரும்பினார்.