சர்கார் நடிகைக்காக காத்திருக்கும் படக் குழு..

by Chandru, Oct 14, 2020, 10:20 AM IST

விஜய் நடித்த சர்கார், விஷால் நடித்த சண்ட கோழி 2படங்களில் வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இவரிடம் யானை படத்தில் நடிக்க இயக்குனர் தருண்கோபி கேட்டிருக்கிறார். கால்ஷீட்டுக்காக ஒரு மாதம் காத்திருக்க ஒகே சொல்லி இருக்கிறது இப்படக் குழு.விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற திரைப்படங்களை இயக்கிய தருண்கோபி, அடுத்து, யானை என்ற படத்தை இயக்குகிறார். இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மனித மன உணர்வுகளை சொல்லும் கதையான இந்த படம் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதுபற்றி இயக்குனர் தருண் கோபி கூறும்போது,நாங்கள் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவோம், பின்னர் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லில் படப்பிடிப்பைத் தொடர உள்ளோம். இப்படத்தின் கதை வாழ்க்கையின் அனுபவமாக இருக்கும். ஒரு பெண் திருமணமானதும், அவள் ஒரு மகளாகத் தனது மாமியார் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதேபோல், ஒரு பையன் திருமணம் செய்து கொள்ளும்போது, ​​அவன் மாமியாருக்கு ஒரு மகனைப் போல இருக்க வேண்டும். கல்யாணத்துக்கு பிறகும் ஒரு மருமகளா, அல்லது மருமகனாகவே இருந்தால் சிக்கல் தான்.இது ஒரு குடும்ப சென்டிமென்ட். பெண்களுக்கு யானையின் வலிமை இருக்கிறது. யானையின் பலம் தெரியாமல் மோதினால் என்ன ஆகும்? பெண்களின் மனநிலையை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றார் தருண் கோபி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, இப்படத்தில் லெனின் பாரதி இயக்கிய விருது பெற்ற மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதாநாயகனாக நடித்த ஆண்டனி நடிக்கிறார். பிரதான கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் எங்களுக்கு கால்ஷீட் தேதிகளை வழங்கியுள்ளார். இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இசையமைக்க இளையராஜா சாரிடமும் பேசியுள்ளேன்.அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக இதுபற்றி தெரிவிப்போம்"என்று அவர் கூறினார்.

யானை படத்தில் மாரிமுத்து மற்றும் இளவரசு உட்பட 41 கதாபாத்திரங்கள் படத்தில் நடிக்க உள்ளனர். இதற்கிடையில், தருண் கோபியின் திமிரு 2 தயாராக உள்ளது. இது ஒரு அதிரடி அடிப்படையிலான ஸ்கிரிப்ட். திரையரங்குகளில் மட்டுமே இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்காக ஏற்கனவே விநியோகஸ்தர்களுடன் படக்குழு பேசி உள்ளது.

Get your business listed on our directory >>More Cinema News