பாலா இயக்கிய, அவன் இவன் படத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்தனர். அதன்பிறகு இந்த கூட்டணி முழு படத்தில் இணைந்து நடிக்கவில்லை. ஆனாலும் ஆர்யா நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் விஷால் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. அது தற்போது உறுதியாகி உள்ளது.விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இப்படம் இந்த அக்டோபர் 16 முதல் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைத் தளத்தில் கூறியுள்ள இயக்குனர் ஆனந்த் சங்கர் "மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இரண்டு ஹீரோக்கள் விஷால் ஆர்யா மீண்டும் இணைகின்றனர். இவர்களில் வில்லன் வேடத்தில் நடிக்க முன்வந்திருப்பது ஆர்யா. படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் ஆர்யா. மிர்னாலினி ரவி ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயின் தேர்வு அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படுவார்.
படத்திற்கான ஒரு சிறந்த இசையமைப்பாளருடன் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இதற்கிடையில், ஆர்யா டெடி மற்றும் பா .ரஞ்சித்தின் பாக்ஸர் படத்தில் பிஸியாக இருக்கிறார். மறுபுறம் விஷால் தான் நடித்து முடித்துள்ள சக்ரா படத்தை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் தொடங்கும் ஆனந்த் சங்கரின் படத்தை முடித்துவிட்டு, துப்பறிவாளன் 2ம் பாகம் படத்தை இயக்கி நடிக்க ஸ்கிரிபட் உருவாகி வருகிறார் விஷால். இப்படம் கோடைக்கால வெளியீடாகப் படம் திட்டமிடப்பட்டுள்ளது.