ஜெயம் ரவி நடித்த படம் 'தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். மோகன்ராஜா இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, நயன் தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிரடி திரில்லராக அமைந்திருந்த 'தனி ஒருவன்' மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெயம் ரவி நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்க, அரவிந்த் சுவாமி வில்லனாகத் தனது ஸ்டைலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இப்போது, பிளாக்பஸ்டர் படமான இதன் 2ம் பாகம் ஸ்கிரிப்ட் முடித்து தயாராக உள்ளார் இயக்குனர் மோகன் ராஜா. இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 2021 முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. தற்போது தனி ஒருவன் 2ம் பாகம் உருவாகவிருக்கிறது.
இதில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர் நடிக்க உள்ளார்.பல மொழிகளில் ஒரே நேரத்தில் தனி ஒருவன் 2ம் பாகம் படம் உருவாகவிருப்பதால் படத்தை வலுப்படுத்த அதற்கேற்ப நட்சத்திரங்களை தேர்வு செய்து வருகின்றனர். அநேகமாக மம்மூட்டி நடிக்கக்கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது.
இயக்குனர் மோகன் ராஜா தனது சகோதரர் ஜெயம் ரவியுடன் ஏழாவது முறையாக 'தனி ஒருவன்2' படத்திற்காக இணைகிறார்.
ஏற்கனவே இவர்கள் இணைந்து வழங்கிய ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி, தனி ஒருவன் படங்கள் எல்லாமே ஹிட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.ஜெயம் ரவி தற்போது 'பொன்னியன் செல்வன்' மற்றும் 'ஜன கண மன' படங்களுக்கான பணிகளை முடிக்கவுள்ளார். இதையடுத்து 'தனி ஒருவன் 2' படத்திற்கான பணிகளைத் தொடங்கவுள்ளார். இதற்கிடையில், தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமியின் கதாபாத்திரம் இறந்து விடும் இந்நிலையில் இப்படத்தின் 2ம் பாகத்தை இயக்குனர் எப்படி எடுத்துச் செல்லவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.