இந்த நடிகை டிரஸ் போட்டிருக்காரா?இல்லையா?

by Chandru, Oct 15, 2020, 14:52 PM IST

சமூக வலைத்தளங்களைப் பல நடிகைகள் தங்களது பப்ளிசிட்டி எந்திரமாக மாற்றி இருக்கின்றனர். விதவித கவர்ச்சி போஸ்களில் படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்கவிடுவதுடன் அதன் மூலம் பட வாய்ப்புகளையும் பெறுகின்றனர். ஒரு சில நடிகைகள் டாப் லெஸ், நிர்வாண படங்களும் வெளியிட்டு அக்கப்போர் செய்கிறார்கள்.

காதலன் ஜார்ஜ் பனயியோட்டுவை திருமணமே செய்துக் கொள்ளாமல் அவருடன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார் மதராஸ பட்டணம் நடிகை எமி ஜாக்ஸன். தற்போது லண்டனில் இருக்கும் அவர் உடல் தோற்றத்தைக் கச்சிதமாக சிக்கென வைத்துக்கொள்ள முடிவு செய்து யோகா பயிற்சியில் தீவிரம் காட்டுகிறார். தான் வாழும் பகுதியில் உள்ள மரங்கள் அடர்ந்த காடு பகுதிக்குச் சென்றவர் யோகா பயிற்சிகள் செய்தார்.

ஆனால் அவர் உடை அணிந்து வந்தாரா? இல்லையா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு உடம்போடு உடம்பாக ஒட்டிக்கொண்டிருக்கும் இறுக்கமான, தோல் நிறத்திலான உடை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார். உடம்போடு ஒட்டிய உடையுடன் கூடிய புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். ரசிகர்கள் அவரது தோற்றத்தைக் கண்டு ருசிகரமான கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். எமி ஜாக்ஸன் சமீபத்தில்தான் தனது குழந்தையின் 1ம் பிறந்த தினத்தைக் கொண்டாடினார். மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் பட வாய்ப்பைத்தான் காணோம்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News