அனிருத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ...!

Dhanush, Aniruth Joining hands in new film

by Chandru, Oct 16, 2020, 16:44 PM IST

இசை அமைப்பாளர் அனிருத் தமிழ் திரையுலகில் தனுஷ் நடித்த 3 என்ற படம் மூலமாக அறிமுகமானார். இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கினார். முதல் படத்திலேயே ஒய் திஸ் கொலைவெறி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் ஆகிய படங்களுக்கும் தொடர்ந்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், நானும் ரவுடிதான் படங்களுக்கும் அனிருத் இசை அமைத்தார்.

நகையும் சதையுமாக இருந்த தனுஷ், அனிருத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் புதிய படத்தில் இணையவில்லை. மீண்டும் பழைய நட்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.இன்று அனிருத் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ் அவருடன் இணையும் புதிய படம் அறிவித்திருக்கிறார். தனுஷின் 44-வது படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தம புத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், இப்படத்தை இயக்க உள்ளதாகத் தெரிகிறது.

6 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் அனிருத் இணையும் தகவல் இருதரப்பு ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை